Falls

Falls
5 Falls

வெள்ளி, 4 ஜனவரி, 2008

FAKE போடலாமா ? வெட்டியாருக்கு ஒரு பதில்

மந்திரிக்கு மட்டும் ஏன் இவ்வளவு சம்பளம் ? ஏன் அந்த வேலையை நான் செய்ய மாட்டேனா ?

என்னை விடவா அவர் கடினமான வேலை செய்யறhர் ?

அரண்மனை சமையல்காரன் அரசரிடம் கேட்ட கேள்வி இது.
வாய்ப்பினைக் கொடுங்கள் அரசே. நாங்களும் எங்களை நிருபிக்கிறேhம்

அமைச்சர் இல்லாத ஒருநாள் அரசர் சமையல்காரரை அழைத்தார்

அய்யா. இன்று அமைச்சர் வரவில்லை. இன்று நீர்தான் எனக்கு அமைச்சர். நன்கு வேலை செய்தால் உம்மை நிரந்தரமாக்குவதை நான் பரிசீலிக்கிறேன் - அரசர்

சமையல்காரருக்குத் தலைகால் தெரியவில்லை. திடீரென்று ஒரு நாள் அமைச்சரானதில் அவருக்குப் பேரானந்தம்.


கொலு மண்டபத்தில் அரசர் அமைச்சர்களுடன் வீற்றிருந்தார். அப்போது வாயிற்காவலன் வந்து ஒரு தகவலைத் தெறிவித்தான்.

அரசே. நம்முடைய மேற்கு எல்லை வழியாக ஒரு வண்டி வந்துள்ளது. அது வடக்கு வாயிலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுதான் அவன் அளித்த தகவல்.


அரசர் சமையற்கார அமைச்சரைப் பார்த்தார்.

அமைச்சரே, நீர் சென்று அந்த வண்டி பற்றிய விபரம் அறிந்து வாரும் - என்று பணித்தார்

அமைச்சரும் அவருடைய முதல் பணியைச் செய்ய மிகுந்த ஆவலோடும் உற்சாகத்தோடும் வண்டி செல்வதாகச் சொல்லப்பட்ட திசையில் விரைந்தார்.

அமைச்சருக்கும் அரசருக்கும் நடந்த உரையாடல்கள் - இதோ அரசே. அந்த வண்டி சேர நாட்டிலிருந்து வந்துள்ளது - அமைச்சர்

அப்படியா ? சரி வண்டி எங்கே செல்கிறது ? - அரசர்

அதை நான் அறியவிலலை அரசே. நான் மீண்டும் சென்று அறிந்து வருகிறேன் - அமைச்சர் கிளம்பிச் சென்றhர்

வடக்கே பல்லவ நாட்டுக்குச் சென்று கொணடிருக்கிறது அரசே. - அமைச்சர்

நல்லது. அதில் என்ன பொருட்களைக் கொண்டு செல்கிறhர்கள் ? - அரசர் வினவினார்

அது தெரியவில்லை அரசே. நான் மீண்டும் சென்று அறிந்து வருகிறேன் - அமைச்சர் மீண்டும் கிளம்பிச் சென்றhர்

யானைத் தந்தங்கள் போகின்றன அரசே - அமைச்சர்

ஆகா அப்படியானால் அவர்கள் நம் சுங்கச் சாவடியில் வரிப்பணம் செலுத்த வேண்டுமே. விசாரித்தீரா ? - அரசர் வினா எழுப்பினார்

அமைச்சர் மீண்டும் தலையைச் சொறிந்து கொணடு நின்றhர்.

அப்போது பழைய அமைச்சர் அரசவைக்கு வந்தார்.

அரசர் பழைய அமைச்சரிடம் கேட்டார்.

அமைச்சரே. ஏதோ ஒரு வண்டி வடக்கு நோக்கிச் செல்கிறதாமே.
பழைய அமைச்சர் மறுமொழி பகன்றhர்

ஆம் அரசே. இரு குதிரைகள் கொண்ட ஒரு வண்டி வடக்கு வாயிலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. நிறுத்தி விசாரித்தேன். சேரநாட்டிலிருந்து பல்லவ நாட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறது. முழுவதுமாக யானைத் தந்தங்களை அடுக்கி வைத்திருக்கிறhர்கள். நம்முடைய மேற்கு வாயில் சுங்கச் சாவடியில் வாp செலுத்தி அதற்கான முத்திரையிட்ட ஒப்பச் சீட்டும் வைத்திருக்கிறhர்கள் அரசே.

அரசர் திரும்பி சமையற்கார அமைச்சரைப் பார்த்தார் அவர்

தலைப்பாகையைக் கழற்றி வைத்து விட்டுத் தயாராக இருந்தார் - சமையற் கட்டுக்குச் செல்வதற்கு

அப்படின்னா ஒரு சமையற்காரன் அமைச்சராக முடியாதா ? இல்ல ஆகக்கூடதா ?

ஆகலாம் ஐயா ஆகலாம். ஆனால் அதற்கு சில காலம் பிடிக்கும். அரசன் கொஞ்சம் விலை கொடுக்க வேண்டும். சில பல இடங்களில் நட்டப் பட வேண்டும்


அத்தோடு ஈகோ இல்லாமல் வேரொரு சீனியர் அமைச்சரோடு BUDDING செய்ய வேண்டும்


எடுத்த உடனே கேம்பஸில் நேரடியாக அமைச்சராக முயற்சிக்கக் கூடாது.

அனுபவம் என்பது அனுபவித்துத்தான் வரவேண்டுமே தவிர அனுபவித்தது போல பேப்பரில் காட்டிக் கொண்டால் வராது.

அப்படி காட்டிக் கொண்டு வெல்லும் ஒரு வேலையில் நமக்கு வளர்ச்சி இருக்காது. ஏனெனில் சுட்சுமங்களோ. சுலப வழிமுறைகளோ வெறும் பேப்பரால் கிடைக்காது.

தவறுகள் செய்து செய்து கற்கும் அனுபவத்தில்தான் கிடைக்கும். அந்தத் தவறுகளைச் செய்ய உங்கள் நிறுவனம் எத்தனைமுறை அனுமதிக்கும்.


சிந்தித்துப் பாருங்கள்.

9 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அந்த அமைச்சரை விட அறிவானவர்கள் கொண்டுள்ள அறிவுரைகள் கூகுளாண்டவர் கொடுப்பார், பல நண்பர்கள், உறவினர்கள் அமைச்சர்களாக இருப்பார்கள் அவர்களுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் அவர்கள் அலுவலக போனிலிருந்து கால் போட்டு சொல்லி கொடுப்பார்கள்.

பிஸினஸ் லாஜிக், லாஜிக் மாத்திரம் செய்ய தெரிந்தால் போதும், லாஜிக் திறமை 20 ஆண்டுகள் வேலையில் இருப்பவனுக்கு கூட இருக்காது... ;)
//தவறுகள் செய்து செய்து கற்கும் அனுபவத்தில்தான் கிடைக்கும். அந்தத் தவறுகளைச் செய்ய உங்கள் நிறுவனம் எத்தனைமுறை அனுமதிக்கும்.
//

எந்த உலகத்தில் உள்ளீர்கள் நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது ஒரு பங்கு வேலை, பலருக்கு கொடுக்கப்பட்டிருக்கும். ஒரு தோல்வி அல்லது தவறு என்பது நிறுவனம் அறிந்து கொள்ளாது என்று நினைக்கின்றேன். அது செயல் படும் ஆளின் திறமையைப்பொருத்தது. ;)

கிருஷ்ணா சொன்னது…

//நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது ஒரு பங்கு வேலை, பலருக்கு கொடுக்கப்பட்டிருக்கும். ஒரு தோல்வி அல்லது தவறு என்பது நிறுவனம் அறிந்து கொள்ளாது என்று நினைக்கின்றேன்.//

அனானி அவர்களே. பெயரோடு வாருங்கள். விரிவாகப் பேசலாம் தலையிலியிடம் பேசிப் பயனில்லை.

வெட்டிப்பயல் சொன்னது…

அந்த ஊர்லயே ஒருத்தன் மந்திரி ஆகனும்னு ரொம்ப முயற்சி பண்ணிட்டு இருந்தான். ஒரு மந்திரி என்ன என்ன எல்லாம் செய்யனும்னு பல நாட்டு மந்திரிகள்கிட்ட அறிவுரை கேட்டிருந்தான்.

திடீர்னு அவனுக்கு ஒரு நாள் இதே மாதிரி மந்திரி வாய்ப்பு கிடைச்சுது. இதே மாதிரி ஒரு வண்டி வருது. அதை போய் விசாரிச்சிட்டு வர சொல்லி புது அமைச்சர், பழைய அமைச்சர் ரெண்டு பேர்கிட்டயும் மன்னன் தனி தனியா சொல்றார்.

ரெண்டு பேரும் பார்த்துட்டு வந்து மன்னன் முன்னாடி நிக்கறாங்க. பழைய அமைச்சரிடம் மன்னன் அதை பற்றி விசாரிக்கிறார். பழைய அமைச்சரும் அதே விஷயத்தை சொல்றார்.

புது அமைச்சரிடம் மன்னன் விசாரிக்கிறார்.

"மன்னா! அது சேர நாட்டிலிருந்து தந்தங்களை எடுத்து செல்கிறது. அதே சமயம் அந்த வண்டியில் சில ரகசிய ஓலைகளும் தந்தங்கள் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. அதனாலே எந்த பிரச்சனையுமில்லாமல் செல்ல வேண்டுமென்பதால் ஒழுங்காக வரி செலுத்தி எடுத்து செல்கிறார்கள். மேலும் அந்த வண்டி ஓட்டுபவன் ஒற்றன். அவன் நம் நாட்டில் பாதுகாப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்று பார்த்து கொண்டே செல்கிறான்"

"ஆ... பழைய மந்திரி தவற விட்டதை நீங்கள் எப்படி கண்டுபிடித்தீர்கள்"

"மன்னா! அவர் இது தினமும் நடக்கும் நிகழ்ச்சி தானே என்று சாதாரணமாக விட்டுவிட்டார். நான் புதிதாக இருப்பதால் ஒன்றிற்கு இரண்டு முறை சோதனை செய்தேன். மேலும் பல நாட்டு மந்திரிகளிடம் நான் பயிற்சி பெற்றதால் எனக்கு இது சாத்தியமானது!!!"

"அந்த ஒற்றனை என்ன செய்தீர்கள்?"

"அவனை நம் காவலாட்களை விட்டு பிடித்து பாதாள சிறையில் அடைக்க செய்திருக்கிறேன்!!!"

"நீரே இனி இந்த நாட்டின் பிரதம மந்திரி"

இது சும்மான்னாட்டிக்கும் கதைனு நினைக்காதீங்க. நிறைய பேர் இந்த மாதிரி போய் ப்ரமோஷன் வாங்கியிருக்காங்க. அவுங்களுடைய லேர்னிங் கர்வ் இன்னும் ஸ்டீப்பா இருக்கும் ;)

கிருஷ்ணா சொன்னது…

// மேலும் பல நாட்டு மந்திரிகளிடம் நான் பயிற்சி பெற்றதால் எனக்கு இது சாத்தியமானது!!!"//

இது உங்கள் வாக்கு. மிக்க நன்றி வெட்டியாரே.

நானும் அதைத்தான் சொல்ல முயற்சிக்கிறேன்

அனுபவம். பயிற்சி இவை தரும் விக்ஷயங்களை பிற தரா.

சரி பாலா. நான் உங்கள் பரம விசிறி.

பதிவெழுத ஆர்வம் வந்ததே உங்கள் கொல்ட்டி மற்றும் தீறினாற் சுட்ட கதைகளால்தான்.

பெயரில்லா சொன்னது…

//அந்த ஊர்லயே ஒருத்தன் மந்திரி ஆகனும்னு ரொம்ப முயற்சி பண்ணிட்டு இருந்தான். ஒரு மந்திரி என்ன என்ன எல்லாம் செய்யனும்னு பல நாட்டு மந்திரிகள்கிட்ட அறிவுரை கேட்டிருந்தான்.//

எந்த நாட்டு மந்திரிகிட்டயும் அறிவுரை கேக்காம (அனுபவம் இல்லாம), அனுபவம் இருக்குன்னு மந்திரி சொல்றது (Fake சர்டிபிகேட் குடுக்கிறது மாதிரி) தப்பு இல்லியா?

கிருஷ்ணா சொன்னது…

//அந்த ஊர்லயே ஒருத்தன் மந்திரி ஆகனும்னு ரொம்ப முயற்சி பண்ணிட்டு இருந்தான். ஒரு மந்திரி என்ன என்ன எல்லாம் செய்யனும்னு பல நாட்டு மந்திரிகள்கிட்ட அறிவுரை கேட்டிருந்தான்.//


மந்திரி என்னவெல்லாம் செய்வார் என்று மட்டும் தெரிந்து கொண்டால் போதாது.

அதை எப்படிச் செய்யவேண்டும் என்றும் தெரியவேண்டும் அறிவுரை எலலாம் அதிக நாள் கைகொடுக்காது என்பதே என் அனுபவம்

நான் பேச வந்தது Proactiveness and presence of mind பற்றி.

வேலை நடக்கும். ஆனால் அந்த வேலை ஆக எடுக்கும் காலம், வேலையின் தரம்

//எந்த நாட்டு மந்திரிகிட்டயும் அறிவுரை கேக்காம (அனுபவம் இல்லாம), அனுபவம் இருக்குன்னு மந்திரி சொல்றது (Fake சர்டிபிகேட் குடுக்கிறது மாதிரி) தப்பு இல்லியா?//

நன்றி அனானி அவர்களே. பெயரோடு வரலாமே

ஷாகுல் சொன்னது…

இதே கதையை வேறு மாதிரி கேள்வி பட்டிருக்கிறேன்.

நீங்கள் தென்காசியா?

என். உலகநாதன் சொன்னது…

நண்பரே,

சிங்கம் படம் பார்த்தீர்களா?

இந்த கதை அப்படியே வேறு மாதிரி சூர்யா, விவேக் மற்றும் விஜயக்குமார் பேசும்படி சொல்லி இருப்பார்கள்.

கிருஷ்ணா சொன்னது…

நன்றி உலகநாதன்

சிங்கம் இன்னும் பார்க்கவில்லை

தேதியைக் கவனியுங்கள்

நான் 2008 லேயே எழுதிவிட்டேன்