Falls

Falls
5 Falls

ஞாயிறு, 24 மே, 2009

இழந்தது என்ன ?

அதிகாலை மணி 4 45. (சென்னையில்)

கத்தார் ஏர்வேஸ் விமானம் மெதுவாகப் பின்னோக்கி நகர்ந்து ரன்வேயில் நிலைகொண்டு, வேகமாக ஓடி ஆகாயத்தில் தாவியது.. முட்டை வடிவ ஜன்னலுக்கு வெளியே சோடியம் விளக்குப் புள்ளிகளுடன் சென்னை நகரம் மெல்ல மெல்ல சிறிதாகிக் கொண்டிருந்தது.

ஸ்பீக்கர் கரகரக்க கேப்டன் தன்னையும் சக விமான ஊழியர்களையும் உடைந்த ஆங்கிலத்தில் அறிமுகம் செய்தார். சற்று நேரத்தில் காலை உணவு வழங்கப் படும் என்றும், பயணிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

விமானம் வட்டமடித்து மேற்குத் திசையில் திரும்பி லண்டன் நகரை நோக்கிப் பறக்கத் தொடங்கியது.

நான் நன்கு சாய்ந்து உட்கார முயற்சித்தேன். எகானமி வகுப்பு இருக்கை அந்த வசதியைக் கொடுக்கவில்லை. முடிந்த வரையில் வசதியாக உட்கார்ந்து கொண்டேன்.

இதுதான் என்னுடைய முதல் விமானப் பயணம்.

முதல் விமானப் பயணமாக இருந்தாலும் என்னால் இந்தப் புதிய அனுபவத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. மனம் ஏனோ கனத்துக் கிடந்தது.

கடந்த நான்கு மாதத்தில் நடந்து முடிந்த நிகழ்ச்சிகள் இந்த விமானப் பணிப்பெண் கொடுத்த புளிப்பு மிட்டாய் போலவே புளிப்பானதுதான்.

ஆனாலும் என்னுடைய மனம் அதனைத் திரும்பிப் பார்ப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை.

_____________________________________________________________________________________

பொங்கல் விடுமுறை முடிந்து ஆபீஸுக்கு வந்து என்னுடைய கம்ப்யூட்டரைத் திறந்தேன். முதலில் ஈமெயில்களைப் பார்ப்பதுதான் வழக்கம். என்னுடைய பிராஜக்ட் மேனேஜர் ஒரு ஈமெயில் சிவப்புநிற எழுத்துக்களோடு அனுப்பியிருந்தார்

சிவப்பு மிகவும் முக்கியம் என்று அர்த்தம்.

திறந்து பார்த்தேன். இன்னும் சொன்னால் அது ஒரு ஈமெயில் இல்லை. தனியே சந்திப்பதற்காக ஒரு மணி நேரம் ஒதுக்கி, வரமுடியுமா என்று அழைப்பு அனுப்பியிருந்தார்.

குறித்த நேரத்தில் அவருடைய அறையின் கண்ணாடிக் கதவைத் தட்டி விட்டு நுழைந்தேன்.

வாங்க எம். கே. எழுந்து கை குலுக்கினார். இருவரும் எதிரெதிரே உட்கார்ந்தோம்.

நேராகவே விஷயத்திற்கு வந்தார்.

நம்ப பிராஜக்ட்டோட காஸ்டைக் குறைக்கணும்னு அக்கவுண்ட்ஸ் மானேஜர் நினைக்கிறhர். அதனால டீம்லே அதிகமா புதுப் பசங்களை எடுக்கலாம்னு ஒரு ஐடியா இருக்கு. ஒரு சீனியர் டீம் மெம்பரா உங்க ஒப்பீனியன் என்ன ?

நான் லேசான குழப்பத்துடன் உட்கார்ந்திருந்தேன்.

என்ன சொல்வதென்று எண்ணிக் கொண்டு சம்பந்தமில்லாமல் புன்னகைத்து வைத்தேன்.

அவர் தொடர்ந்தார்.

இப்போ நம்ப டீம்லே நீங்க, ரவி, சுபா மூணு பேரும்தான் அதிகமா பில்லாகிற சீனியர் மெம்பர்ஸ். இப்போ அடுத்த லெவல்லே ஓப்பனிங் எதுவும் இல்லை. அதனால உங்க மூணு பேர்ல ஒருத்தரை மட்டும்தான் நம்ப அக்கவுண்ட்லே இதே லெவல்லே வச்சிக்க முடியும்.

எனக்கு லேசாக வியர்க்க ஆரம்பித்தது. ஆக . . . . உலகப் பொருளாதாரத் தேக்கம் என்னுடைய வேலையையும் தொட்டுவிட்டதா ?

வீட்டுக் கடன், அம்மா அப்பாவின் மெடிக்கல் இன்ஷுரன்ஸ், குழந்தைகளின் கான்வென்ட் படிப்பு எல்லாம் என்னுடைய மனதில் வேகமாக வந்து போனது.

மூணுபேர்ல கம்மியான காஸ்ட் சுபாதான். அதனால அவங்களை விட்டுட்டு உங்க ரெண்டு பேரையும் மூவ் பண்ணலாம்னு நாங்க டிசைட் பண்ணியிருக்கோம்.

நீங்க போன வருஷம் அப்ரைசல்லே நல்ல ஸ்கோர் வாங்கியிருக்கீங்க. சர்ட்டிபிகேஷன் எல்லாம் முடிச்சிருக்கீங்க. புரோகிரஷன் டெஸ்டெல்லாம் கூட பாஸ் பண்ணியிருக்கீங்க.

அதனால.. நீங்க வேறே பிராஜக்ட்லே ஹையர் லெவல் டிரை பண்ண ஆரம்பிக்கணும். எத்தனை நாளைக்குதான் இப்பிடியே இருக்க முடியும். நீங்களும் மேனேஜர் ஆக வேண்டாமா ? ஒரு மூணு மாசம் டைம் போதுமா ?

எனக்கு என்ன சொல்வதென்று தொpயவில்லை. குழப்பத்துடன் தலையசைத்தேன்.

பின்பு மெதுவாகக் கேட்டேன். மூணு மாசத்திலே எதுவும் கிடைக்கலேன்னா ?

பிராசஸ் படி பார்த்தா பென்ச்லே போட்டுருவாங்க. திங்க் பாஸிட்டிவிலி எம். கே. இதெல்லாம் உங்களுக்கு ஒரு சேலன்ச். நாமளும் ஒரே இடத்துல ரொம்ப வசதியாக செட் ஆனதால ஒரு மாற்றத்தை விரும்பாமலே ஓட்டிக்கிட்டிருக்கோம். அது நல்லதில்லே. மாற்றம் இருந்தாத்தான் முன்னேற்றமும் வரும். ஆல் தி பெஸ்ட்.

அவர் எழுந்து கை குலுக்கினார்.

நானும் எழுந்து கை குலுக்கிவிட்டு அவருடன் வெளியே வந்தேன்.

அவர் வெளியே நின்றிருந்த ரவியை கை குலுக்கி உள்ளே அழைத்துச் சென்றhர்.

கண்ணாடிக் கதவு எனக்குப் பின்னால் சப்தமில்லாமல் மூடிக் கொண்டது.

_____________________________________________________________________________________

ஏஸி லேசான சத்தத்துடன் ஓடிக் கொண்டிருந்தது. ஏன்னுடைய மகனும் மகளும் பக்கத்துக்கு ஒருவராக மார்பில் தலை வைத்து நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அருகில் என்னுடைய மனைவி திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள்.

இப்போ என்னங்க பண்ணறது. திடீர்னு இப்பிடிச் சொல்றீங்க.

நான் லேசாகச் சிhpத்தேன்

இந்தக் குழந்தைகளப் பாரு. அப்பா இருக்கேன்கிற நினைப்பிலே எவ்ளோ நிம்மதியா தூங்கறhங்க. நான்தான் தீவிரமா முயற்சி பண்ணி ஏதாவது செய்யணும். இன்னும் நிறையப் படிக்கணும். இன்டர்வியூ எல்லாம் கிளியர் பண்ணணும்.

அப்போ வேறே கம்பெனி போகலாம்னு சொல்றீங்களா ?

தொpயலே . . . ஆனா அதையும் யோசிச்சுதான் செய்யணும். இப்போ எந்தக் கம்பெனியும் யாரையும் எடுக்க மாட்டாங்க. எடுத்தாலும் என்னை மாதிhp அதிக அனுபவமுள்ளவங்களை கண்டிப்பா எடுக்க மாட்டாங்க. இ ங்கயே வேறே பிராஜக்ட் ஏதாவது தேடணும் . . . .

தேடினேன் . . . . பெங்களுர், புனே, டெல்லி என்றுதான் ஓப்பனிங் வந்தது. நானும் என் மனைவியும் மலைத்துப் போனோம்.

எப்படி சமாளிப்பது ? குடும்பத்தோடு செல்வதா ? குழந்தைகளுடைய படிப்பு என்னவாகும் ?

நானும் என் மனைவியும் உட்கார்ந்து பேசி, ஆலோசித்து, விவாதித்து, குழம்பி இறுதியில் ஒரு தௌpவான முடிவுக்கு வந்தோம்.

எங்கே கிடைத்தாலும் நான் மட்டும் முதலில் போவது. பின்பு வசதிகளைப் பார்த்துக் கொண்டு எல்லோரும் போவதா வேண்டாமா என்று முடிவு செய்யலாம் என்று தீர்மானித்தோம்.

குழந்தைகளிட் சொல்லிப் புhpயவைக்கும் பொறுப்பை என் மனைவி ஏற்றுக் கொண்டாள்.

நானும் ரவியும் சேர்ந்தே முயற்சி செய்தோம். ஒரு புதிய பிராஜக்டில் பிராஜக்ட் மேனேஜர் பதவிக்கு கிளையன்ட் இன்டர்வியூ இரண்டு பேருக்குமே நடந்தது.

எனக்கு பின்னர் தொpவிப்பதாகச் சொல்லி விட்டு, ரவியை உடனே பொறுப்பேற்கச் சொன்னார்கள். சென்னையிலேயே அவனுக்குக் கிடைத்து விட்டது.

ஏன் மனைவி சோர்ந்து போனாள். நான் முன்பைவிடத் தீவிரமாகத் தேட ஆரம்பித்தேன்.

ஏன்னுடைய இடத்திற்கும் ரவியின் இடத்திற்கும் இரண்டு புதிய பெண்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்கு டிரெயினங் கொடுக்கும் பொறுப்பும் எனக்கு வந்து சேர்ந்தது.

பத்து நாட்களுக்குப் பின்பு ரவியின் பிராஜக்டின் கிளையன்ட் கம்பெனி ஈமெயில் அனுப்பியிருந்தது. லண்டனில் அவர்களுடைய சைட்டிலிருந்து சென்னை டீமுடன் வேலை செய்யும் ஆன்சைட் கோஆர்டினேட்டர் பதவி. இரண்டு வருஷத்திற்குப் பிறகு சென்னை வந்து அதே வேலையைச் செய்யலாம்.

இப்போதுள்ள குடும்பச் Nழலில் ஒரு வேலை என்பது முக்கியம். அதை ஒப்புக் கொண்டே ஆகவேண்டிய ஒரு விளிம்பிற்கு நான் தள்ளப் பட்டிருந்தேன்.

பிhpவு தவிர்க்க முடியாததாகி விட்டது.

ரவி ஒருவித பொறhமையுடன் வந்து கைகுலுக்கி வாழ்த்து தொpவித்தான். ஆந்தக் கைகுலுக்கலில் நட்பைக் காண முடியவில்லை.

வீட்டில் பிராட் பாண்ட் இன்டர்நெட் வெப் காமிரா எல்லாம் வாங்கி வைத்து எல்லோருக்கும் எப்படி இயக்குவது என்று சொல்லிக் கொடுத்தேன்.

எல்லோரும் ஆர்வத்துடன் நிறைய கேள்வி கேட்டார்கள்.

என் மகன் கேட்டான். அப்பா இந்தக் காமிரா வழியா உங்களத் தொட முடியுமா ?

என்னால் என்ன பதில் சொல்ல முடியும் ?

இன்று மனைவி, குழந்தைகள், அம்மா, அப்பா, தம்பி எல்லோரும் ஏர்போர்டிற்கு வந்து வழியனுப்பி வைத்தார்கள்.

எத்தனையோ காலமாக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஆன்சைட் வாய்ப்பு கடைசியில் என்னிடம் திணிக்கப் பட்டிருப்பதாக உணர்ந்தேன்.

இது என்ன ? வரமா ?

இதனால் நான் பெற்றது என்ன ? பணமா ? இரண்டாண்டு ஐரோப்பிய வாழ்க்கையா ?

இழந்தது என்ன ? குடும்பத்தின் அண்மை . . . . நண்பனின் நேசம் . . . . இன்னும் எத்தனையோ . . . . . .

என் மகன் கேட்ட கேள்வி நினைவுக்கு வந்தது. இழந்ததே அதிகம் என்பது தௌpவாகத் தொpந்தது.

இத்தனை விலை கொடுத்து இந்தப் பொருளாதாரத் தேக்கத்திலிருந்து என்னுடைய வேலையைக் காப்பாற்றிக் கொண்டேன் என்பது மட்டுமே நிஜம்.

ஸ்பீக்கர் கரகரக்க கேப்டன் விமானம் தரையிரங்கப் போவதை உடைந்த ஆங்கிலத்தில் அறிவித்தார்;

முட்டை வடிவ ஜன்னலுக்கு வெளியே மெலிதான பனிப் போர்வைக்கு நடுவில் லண்டன் நகரம் மெல்ல மெல்ல பொpதாகிக் கொண்டிருந்தது. கத்தார் ஏர்வேஸ் விமானம் படிப்படியாக உயரத்தைக் குறைத்து, ரன்வேயில் ஓடி, திரும்பி, நகர்ந்து, குலுங்கி நின்றது.

மதியம் மணி 1 30. (லண்டனில்)

உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது