Falls

Falls
5 Falls

புதன், 13 அக்டோபர், 2010

ஒரு சைபர் குற்றம் - 6 (கடைசி அத்தியாயம்)

ஒரு சைபர் குற்றம் - 1

ஒரு சைபர் குற்றம் - 2

ஒரு சைபர் குற்றம் - 3

ஒரு சைபர் குற்றம் - 4

ஒரு சைபர் குற்றம் - 5
போலிஸுடன் போனதும் டாக்டர் சந்திரன் எல்லாக் குற்றங்களையும் ஒப்புக் கொண்டார்.

ஓரு விபத்தில் தலையில் அடிபட்டதால அன்பு கோமா ஸ்டேஜுக்குப் போயிட்டான். அவன்கிட்டேதான் நாங்க முதல் பரிசோதனையை செஞ்சோம். முதல்ல சிஸ்டம் புரோகிராம் மட்டும்தான் லோடு பண்ணினோம். அன்பு இயங்க ஆரம்பிச்சான். நடந்தான். ஓடினான். ஆடினான் . . . .ஆனா பேசலை.

நாங்க யோசிச்சோம். அவனுக்கு அப்போதைக்கு மொழியில்லே . . படிப்பில்லை . . பிறந்த குழந்தை மாதிரிதான் அவனோட பிஹேவியர் இருந்துச்சு.

அப்போதான் அமைச்சர் இளவேந்தன் ஒரு விஷயம் சொன்னார். அன்பு ஒழுங்காப் படிக்கலே. லை்ப் பூராவும் வேஸ்ட் பண்ணிட்டான். இப்போ ஒரு நல்ல, படிச்ச, புத்திசாலி எம்.பி.ஏ வோட பயோ-இன்பர்மேடிக்ஸ் தகவலை அவனுக்கு ஏத்திட்டா அவனை ஏதாவது ஒரு பிசினஸ்லே செட்டில் பண்ணிடலாம்னு சொன்னார்.

நாங்க பிளான் பண்ணினது கீர்த்தியோட பயோ-இன்பர்மேடிக்ஸ் தகவல். அவ ஒரு எம்.பி.ஏ எச் ஆர். ஆனா அதுக்கு டாக்டர் ஸ்ரீதரன் சம்மதிக்கலே. படிப்பு, புத்திசாலித்தனம் இதெல்லாம் ஒரு தனி மனுஷனோட பல வருஷத்து உழைப்பு. அதை இப்பிடி கொள்ளையடிக்கறது தப்பு. அது இதுன்னு தர்மம் பேசினாரு.

அதனால அமைச்சர் டாக்டர் ஸ்ரீதரன்னை தீர்த்துக் கட்டறதுக்கு சங்கர்னு ஒரு கூலிப்படை ஆளை ஏற்பாடு பண்ணி என்கிட்டே கூட்டிட்டு வந்தாரு. நானும் சங்கரோட பயோ-இன்பர்மேடிக்ஸ் தகவலை காப்பி எடுத்து பார்த்துட்டு நம்பிக்கையான ஆளுன்னு பாஸிடிவான ரிப்போர்டை அமைச்சருக்கு அனுப்பினேன்.

ஆனா அன்புக்கு பயோ-இன்பர்மேடிக்ஸ் தகவலை டிரான்ஸ்பர் பண்ணும் போது தவறுதலா சிடி டிஸ்க் மாறிப் போய் அந்த கூலிப் படை சங்கரோட தகவலை ஏத்திட்டேன். எனக்கு கம்ப்யூட்டர்லே அதிக பயிற்சி இல்லாததால கீர்த்தியோட மூளைலேயும் தவறுதலா மஞ்சுளாவோட தகவலை ஏத்திட்டேன்.

அன்பு டாக்டரைக் கொன்னதுக்கப்புறம் தான் நாங்க இதைக் கண்டுபிடிச்சோம். ஸ்பாட்டிலேயே அவன் போலிஸ்லே மாட்டினதாலே எங்களால அவனுக்கு எந்த டிரீட்மென்டும் குடுக்க முடியலே.

*************************************************************************************

எல்லோரும் அதே அடையாறு காபி ஷhப்பில் புல் தரையில் உட்கார்ந்திருந்தார்கள்.

பாஸ். இந்த கேஸ்ல யாரு கொலைகாரன் ?. சட்டம் யாரைத் தண்டிக்கணும் ? - அனந்த்

கொலை செஞ்சது அன்பு. ஆனா அவன்மூளைல செயல்பட்டது கூலிப்படை ஆளோட பிளான்.

தூண்டினது அமைச்சர்னு அவரைக் கைது பண்ணலாம். ஆனா அவர் தூண்டினது அன்புவை இல்லே. அன்பு அப்பிடி சாட்சி சொல்லவும் மாட்டான்.

டாக்டர் ஸ்ரீதரன் இந்த hpசர்ச்சை ரிஜpஸ்டர் பண்ணி செய்துக்கிட்டிருக்கார். ஆனா ஒரு மனுஷனோட சம்மதம் இல்லாம யாரும் அவனுக்கு டிரீட்மென்ட் குடுக்கக் கூடாது..

டாக்டர் சந்திரன் அன்புக்கு செஞ்சது டிரீட்மென்ட். ஆனா கீர்த்திக்கிட்டேயும், மஞ்சுளாகிட்டேயும் அனுமதியில்லாம தகவல் எடுத்தது திருட்டு. அவங்க கம்ப்ளைன்ட் குடுத்தா டாக்டர் சந்திரன் மேலே திருட்டு வழக்கு போடலாம். ஆனா என்ன திருட்டு போச்சு ?

பார்க்கலாம். கோர்ட் இதை எப்பிடி ஹhன்டில் பண்றhங்கன்னு.

முதல்லே நம்ம சட்டத்திலே சைபர் கிரைம் எல்லாம் சேர்த்து மாத்தணும். டாக்டர் சந்திரன் எஜுகேஷன் தகவலை மட்டும் ஏத்தாம மொத்த தகவலையும் ஏத்துனதால கீர்த்தியும் இப்போ மஞ்சுளான்னு சொல்லிட்டிருக்கா. எனக்கு ஜhலிதான். ரெண்டு வேற வேற ஷேப்புல ரெண்டு மஞ்சுளா. - சந்தீப் விளையாட்டாக சொல்ல . . . .

அதான் அவளோட டிஸ்க் ஒண்ணு இருக்கே . . . அதை வச்சு அவளைப் பழையபடி கீர்த்தியா மாத்து. இல்லேன்னா உன்னைக் கொன்னுடுவேன் - மஞ்சுளா அவனைத் துரத்திக் கொண்டு ஓடினாள்.

பிந்து ஆரம்பித்தாள்.

இது எங்க அப்பாவோட கண்டுபிடிப்பு. சட்டப்படி அவரோட ரிஜஸ்டர்டு பிராபர்டி. சரியான சைபர் சட்டம் வர்ர வரைக்கும் இதை யாரும் பயன்படுத்தக் கூடாதுன்னு நான் கோர்ட் ஆர்டர் வாங்கப் போறேன். இல்லைன்னா கஷ்டப் பட்டு எல்லாரும் வளர்க்கிற திறமையெல்லாம் இளவேந்தன் மாதிரி ஆட்கள் கொள்ளையடிச்சுடுவாங்க.

தினேஷ் இதுக்கும் நீங்கதான் எனக்கு உதவி பண்ணணும். - பிந்து கேட்டுக் கொண்டாள்

தினேஷ் புன்னகைத்தவாறே தலையசைத்தான்.

டிசம்பர் மாதத்து இரவு வேகமாக சென்னையின் மேல் இருளைப் போர்த்தியது..

திங்கள், 11 அக்டோபர், 2010

ஒரு சைபர் குற்றம் - 5

ஒரு சைபர் குற்றம் - 1

ஒரு சைபர் குற்றம் - 2

ஒரு சைபர் குற்றம் - 3

ஒரு சைபர் குற்றம் - 4

ஏன் பாஸ். லிஸ்டுலே இன்னும் கொஞ்சம் ஆளைச் சேர்க்கலாமா ?

சொல்லு

அன்பு. . . . ஆனா அவன் போலிஸ் கஸ்டடிலே இருக்கான். அவனோட லாயரா இருந்தா ஈஸியா மீட் பண்ணலாம். இப்போ விசிட்டரா நம்பளை அனுமதிப்பாங்களான்னு தொpயலே. அப்புறம் . டாக்டர் சந்திரன். அவரையும் பாக்கணும்.

சரி முதல்லே டாக்டர் சந்திரனை பாக்கலாம். போகும்போது சந்தீப்பையும் கூட்டிட்டுப் போலாம்.

அறிமுகத்துக்கு ஈஸியா இருக்கும் - தினேஷ்

அவனைக் கால் பண்ணி அடையாறு காபிஷhப்புக்கு வரச் சொல்லு. நாம அப்பிடியே போய் டாக்டர் சந்திரனை பாத்துரலாம்.

ஓகே. பாஸ். அனந்த் சந்தீப்புக்கு போன் செய்தான்.

இன்னும் அரை மணியிலே அவன் காபிஷhப்பிலே இருப்பான் பாஸ்.

வெல். இப்போ ஒரு கதைச் சுருக்கம் சொல்லு பாப்போம்.

தினேஷ் ரேடியோவை அணைத்துவிட்டு மொபைல் போனிலிருந்த ரெக்கார்டரை ஆன் செய்தான்.

ஒரு மனோத்துவ டாக்டர், ஒரு கம்ப்யூட்டர் டாக்டர். ரெண்டு பேருமாச் சேந்து மனநிலை சரியில்லாதவங்க மூளையை கம்ப்யூட்டர் மாதிரி ரீ-பார்மேட் பண்ணி ஆப்பரேட்டிங் சிஸ்டமெல்லாம் லோடு பண்றhங்க.

குணமான பிறகு பேஷன்ட் டாக்டரை கொலை

சரி. இப்போ நம்ம வழக்கமான கேள்விகளை கேட்கலாம். ஓவ்வொண்ணா கேள்ரா.

அவனோட குறி டாக்டர் _தரன் மட்டும்தானா ? இல்லை கொலைகள் தொடருமா ?

தெரியலே

ஏன் பண்ணினான் ?

தெரியலே. ஆராய்ச்சி பெயிலியரா ஆயிருக்கலாம்.

கொலைக்கு மோட்டிவ் என்ன ? ஆராய்ச்சி பெயிலியரா இருந்தா மோட்டிவே இருக்க வாய்ப்பில்லை. ஆராய்ச்சி சக்சஸ்னா ரகசியத்தைத் திருடறதுக்காக கொலை செஞ்சிருக்கலாம்.

ரகசியத்தைத் திருடறதா இருந்தா அதுல யாருக்கு பெனிபிட் ?

சந்தீப். . . . . மஞ்சுளா . . . . பிந்து . . . . . அமைச்சர் இளவேந்தன் . . . . டாக்டர் சந்திரன் . . . . .

அன்புக்கு நேரடியா பலன் எதுவும் இல்லை. அவனை யாராவது தூண்டியிருக்கலாம்.

யாரு தூண்டியிருப்பாங்க ? எப்பிடி ?

அமைச்சர் இளவேந்தன் . . . .

மாட்டியிருக்கறது அவரோட பையன். சான்ஸ் கம்மி.

பிந்து டாக்டரோட லீகல் வாரிசு. இந்த இன்டலக்சுவல் ப்ராபர்டி ரைட்சும் சட்டப்படி அவளுக்குதான்.

அவளையும் லிஸ்டுலயிருந்து தற்காலிகமா வெட்டு.

சந்தீப். . . . . மஞ்சுளா . . . . டாக்டர் சந்திரன் . . . . .

தினேஷ் காபி ஷhப் பார்க்கிங்கில் காரை நிறுத்தினான்.

இருவரும் காரிலிருந்து இறங்கி நடக்க, சென்ரலைஸ்டு லாக் க்விக் என்று பூட்டிக் கொண்டது.

ஒரு ஓரமான மேiஜயைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டார்கள்.

கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே சந்தீப் பைக்கை நிறுத்திப் பூட்டுவது தொpந்தது. அவனுடன் ஒரு இளம்பெண்ணும் வந்திருந்தாள்.

அனந்த் மஞ்சுளாவிடம் கேட்ட கேள்வி தினேஷுக்கு நினைவுக்கு வந்தது.

டேய் அனந்த் . . . . போன் செஞ்சு பிந்துவையும் இங்க வரச் சொல்லு.

இப்பவே பண்ணவா ?

வெயிட். ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு தேவைப் பட்டா கூப்பிடலாம்.

ஹய் தினேஷ் . . . . .ஹய் அனந்த் . . . . . . மீட் மை ்பியான்ஸி . . . . .

மை ரிசர்ச் பார்ட்னர் மஞ்சுளா.

தினேஷ் புன்னகையோடு கை குலுக்கினான்.

ஸ்ஸ்ஸ் ஆஆஆ என்றhள். நேத்துதான் டாக்டர் சந்திரன் என்கிட்டே இருந்து ரிசர்ச்சுக்காக பயோ-இன்பர்மேஷன்ஸ் கலெக்ட் பண்ணினார். அந்த ஊசி குத்தின வலி.

புறங்கைகளை லேசாகத் தடவிக் கொண்டாள்.

டாக்டர் ஸ்ரீதரன் ஆராய்ச்சி பத்தி உங்ககிட்டே சில விஷயங்கள் கேட்கலாமா ? - தினேஷ்

அனந்த் வழக்கம் போல் குறிப்பெடுக்கத் தொடங்கினான்.

உங்களுக்கு டாக்டர் ஸ்ரீதரன் எப்படித் தெரியும் ?

ஆராய்ச்சிக்குத் தேவையான புரோகிராமெல்லாம் நீங்கதான் எழுதுவீங்களா ?

உங்களத் தவிர வேறே யாராவது அவருக்கு புரோகிராமெல்லாம் எழுதுவாங்களா ?

அத்தனை கேள்விகளுக்கும் அதே பதில்கள். நீங்கள் முந்தைய அத்தியாயத்திலிருந்து படித்துக் கொள்ளலாம்.

நீங்க டாக்டரை எப்பல்லாம் சந்திப்பீங்க ?

அனேகமா தினமும் ஈவ்னிங் சந்திப்போம். நான், சந்தீப் இரண்டு பேருமே சேர்ந்து டாக்டரோட லேபுக்குப் போவோம். சந்தீப் பயோ-இன்பர்மேஷன்ஸ் கலெக்ட் பண்ணுவான். நான் அதை கிளாசிபை பண்ணி டீ-கோட் பண்ணுவேன். அப்புறம் என்னை வீட்ல டிராப் பண்ணுவான்.

உங்க ரூம் மேட் பேர் என்ன ?

கீர்த்தி.

உங்க ஆராய்ச்சி பத்தி அவங்களுக்குத் தெரியுமா ?

தெரியாது. டாக்டர் யாருக்கும் சொல்லக் கூடாதுன்னு சொல்லியிருக்கார்.

அவங்களுக்கு தமிழ் தெரியுமா ?

புரிஞ்சுக்குவா. ஆனா பேச வராது. மலையாளம்தான் பேசுவா.

தினேஷ் அனந்த் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புரிந்து கொண்டார்கள்.

கீர்த்தி இப்போ எங்கே இருப்பாங்க ?

அவ எச். ஆர் எக்சிகியூட்டிவ். ஆபீஸ்ல இருந்து புனே போய் இரண்டு நாளாச்சு.

சந்தீப் கேட்டான். என்ன தினேஷ் ஏதாவது பிராப்ளமா ?

இல்லே. பிராப்ளம் எல்லாமே சால்வ்ட்.

அனந்த். . . . பிந்துவுக்கு போன் பண்ணி வரச் சொல்லு. கொலை காரனைக் கண்டு பிடிச்சாச்சுன்னு சொல்லு.

கண்டு பிடிச்சாச்சா அது அன்புதானே. நேரே பாத்த விட்னஸே நிறைய பேர் இருக்காங்க தினேஷ். - சந்தீப்

ஏன் சந்தீப், கத்தியாலே குத்திக் கொன்னா, கத்தியை கொலைகாரன்னு சொல்லுவீங்களா ?

அன்பு வெறும் ஆயுதம்.

சந்தீப் அயர்ந்தான். மஞ்சுளா அரைகுறையாய்ப் புரிந்து கொண்டு விழித்துக் கொண்டிருந்தாள்.

தினேஷ் தொடர்ந்தான்.

கீர்த்தி புனே போகலே. இங்கே உங்க வீட்டிலே இரண்டு மணி முன்னாடிதான் அவளை சந்திச்சோம்.

கீர்த்தியையா ? . . . . . எங்க வீட்லயா ? அவ கீர்த்திதான்னு எப்பிடிச் சொல்றீங்க.

கீர்த்தியோட ஐடி கார்டை நாங்க உங் வீட்ல பாத்தோம். அதில கீர்த்தியோட பேரையும் அவங்களோட போட்டோவையும் பாத்தோம். நான்தான் மஞ்சுளான்னு சொல்லி அழகா அற்புதமா . . . .தமிழ்லே பேசினா.

எப்பிடி - மஞ்சுளா குழப்பமாகப் பார்த்தாள்.

அது மட்டுமில்லே. உங்க ஆராய்ச்சி பத்தி அவளுக்கு முழுசாத் தொpயும். உங்களோட இ-மெயில் பாஸ்வேர்ட் உட்பட.

எப்பிடி . . . . எப்பிடி இது சாத்தியம் ? மஞ்சுளா படபடத்தாள்.

என்ன மஞ்சுளா. ஆராய்ச்சியெல்லாம் நீங்க பண்ணிட்டு எங்ககிட்டே கேக்கறீங்க. உங்ககிட்டே இருந்து கலெக்ட் பண்ணின பயோ-இன்பர்மேஷன்ஸ் தகவலை கீர்த்தியோட மூளையிலே ஏத்தியாச்சு. அதனால இப்போ அவளாலயும் புரோகிராம் எழுதமுடியும்.

சந்தீப் கேட்டான். யாரு தினேஷ் அந்தக் கொலைகாரன் ?

தினேஷ் புன்னகைத்தான்.

பிந்து வந்துரட்டடும். இதுக்கு மேல போலிஸ் கிட்டே போயிடலாம். இனி சட்டப் படிதான் போகணும். ஏனிவே . . . . இந்த மாதிரி குற்றத்துக்கெல்லாம் இந்தியாலே இதுவரை சட்டமே இல்லை. சைபர் சட்டத்தை இன்னும் நாம நிறைய திருத்தணும்.

பிந்துவுக்காக நான்கு பேரும் காத்திருந்தார்கள்.

வியாழன், 7 அக்டோபர், 2010

ஒரு சைபர் குற்றம் - 4

ஒரு சைபர் குற்றம் - 1

ஒரு சைபர் குற்றம் - 2

ஒரு சைபர் குற்றம் - 3

மஞ்சுளாவின் வீடு அழகாக இருந்தது. அவளுடைய கல்லுhரித் தோழியுடன் தங்கியிருந்தாள்.

உங்க பிரண்டும் படிக்கிறhங்களா ? - அனந்த் முதலில் ஆரம்பித்தான்.

இல்லே அவ சாப்ட்வேர்லே வேலை செய்யிறh . . . ஒரு பெரிய ஐடி கம்பெனியின் பெயரைச் சொன்னாள்.

இப்பல்லாம் பொண்ணுங்க லேடீஸ் ஹhஸ்டலை விட்டுட்டு தனியா வீடெடுத்துத் தங்க ஆரம்பிச்சுட்டாங்க. இல்லையா ?

மஞ்சுளா அழகாகப் புன்னகைத்தாள்.

டாக்டர் ஸ்ரீதரன் ஆராய்ச்சி பத்தி உங்ககிட்டே சில விஷயங்கள் கேட்கலாமா ? - தினேஷ்

கேளுங்க.

அனந்த் வழக்கம் போல் குறிப்பெடுக்கத் தொடங்கினான்.

உங்களுக்கு டாக்டர் ஸ்ரீதரனை எப்படித் தெரியும் ?

நான் ஒரு எம் எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ். இப்போ பி.எச்டி பட்டத்துக்காக ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கிறேன். டாக்டர் ஸ்ரீதரன் எனக்கு கைடு.

ஆராய்ச்சிக்குத் தேவையான புரோகிராமெல்லாம் நீங்கதான் எழுதுவீங்களா ?

எல்லாம் எழுதமாட்டேன். சின்னச் சின்ன மாடுல்ஸ்தான் நான் எழுதிக் கொடுப்பேன். டாக்டர் அதையெல்லாம் அவருக்குத் தேவையான வரிசைலே கம்பைல் பண்ணிப்பார்.

உங்களத் தவிர வேறே யாராவது புரோகிராம் எழுதுவாங்களா ?

இல்லை. நான் மட்டும்தான்.

நீங்க டாக்டரை எப்பல்லாம் சந்திப்பீங்க ?

கிளாஸிலேதான் அவரைப் பாக்க முடியும். நேரிலே கொஞ்சம் பேசிட்டு புரோகிராம் டீடெயில் எல்லாம் இ-மெயில்லே அனுப்பிடுவார்.

உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா அந்த மெயில் எல்லாம் நாங்க பாக்கலாமா ? ஷ்யூர்.

மஞ்சுளா லேப்டாப்பை லாகின் செய்து கொடுத்தாள்.

அனந்த் எழுந்து அந்த அறையை ஒரு சுற்று சுற்றி வந்தான்.

எல்லா இ-மெயிலும் அனேகமாக ஒரே மாதிரியாக இருந்தது.

“ரெஸ்பெக்டட் சார். இத்துடன் புரோகிராமை இணைத்துள்ளேன்.”

ஓவ்வொரு இ-மெயிலிலும் ஒவ்வொரு புரோகிராம் ்பைல் இணைக்கப் பட்டிருந்தது. டாக்டர் ஸ்ரீதரன், டாக்டர் சந்திரன், சந்தீப் எல்லோருக்கும் இ-மெயில்கள் காப்பி செய்யப்பட்டிருந்தன.

டாக்டர் சந்திரனுக்கு ஏன் காப்பி போடறீங்க ?

அவருதான் எங்க ப்ராஜக்டுக்கு பைனான்சியல் சப்போர்ட். அத்தோட அவரோட ஹhஸ்பிடல்லே வச்சுதான் ரெண்டு டாக்டர்களும் சேந்து பேஷன்டுக்கிட்டே டெஸ்ட் பண்ணுவாங்க.

சரி நாங்க டாக்டர் சந்திரனை எப்போ பாக்கலாம் ? அவரோட டைமிங் என்ன ?

அவரு ரொம்ப பிஸி. அதிகமா எங்க ரிஸர்ச்சில இன்வால்வ் ஆகவும் மாட்டார்.

ஓகே . . . . மஞ்சுளா. எங்களுக்கு ஒவ்வொரு புரோகிராம் மாடுலோட அடிப்படை பயன்பாடு என்ன அப்பிடின்னு ஒரு டீடெயில் தர முடியுமா ?

ஷ்யூர்.

மஞ்சுளா. நான் ஒரு கேள்வி கேக்கலாமா ? - அனந்த் தொடங்கினான்

கேளுங்க.

மலையாள புக்கெல்லாம் படிக்கிறீங்க. நானும் வந்ததிலேயிருந்து கவனிச்சேன். அதெப்பிடி கொஞ்சம் கூட மலையாள வாசனையே இல்லாம சுத்ததமா தமிழ் பேசறீங்க ?

என்னோட ரூம்மேட் கீர்த்தி மலையாளி. இது அவளோட புக்ஸ்.

கீர்த்தி . . . . . அழகான பேர் . . . கீர்த்தியும் அழகா இருப்பங்களா ? - அனந்த்.

மஞ்சுளா மறுபடியும் அழகாகப் புன்னகைத்தாள்.

தினேஷும் அனந்தும் மஞ்சுளாவிடமிருந்து செல் நம்பர், இ-மெயில் ஐடி இத்யாதிகளை வாங்கிக்கொண்டு விடைபெற்றhர்கள்.

தினேஷ் காரை ஓட்டிக் கொண்டே பேச ஆரம்பித்தான்

ஏன்டா . . எல்லாப் பொண்ணுங்ககிட்டேயும் மலையாள வாசனை அது இதுன்னு ஒரே கேள்வியாக் கேக்கறே ? கேஸுக்கு சம்பந்தமா உருப்படியா ஏதாவது கேக்கக் கூடாதா ?

கேஸுக்கு சம்பந்தமான உருப்படியான கேள்விதான் பாஸ். மஞ்சுளா வீட்ல ஒரு முக்கியமான எவிடன்ஸ் பாத்தேன்.

ஆனந்த் சொல்லவும் தினேஷ் ஆச்சரியமானான்.

புதன், 6 அக்டோபர், 2010

ஒரு சைபர் குற்றம் - 3

ஒரு சைபர் குற்றம் - 1

ஒரு சைபர் குற்றம் - 2



இதுதான் அப்பாவோட ரிஸர்ச் லேப். பிந்து வராந்தாவின் கடைசியில் இருந்த அறைக் கதவைத் திறந்தாள்.

அறை சுத்தமாக இருந்தது. ஒருபக்க சுவர் முழுவதும் கண்ணாடியால் மூடப்பட்ட புத்தக அலமாரிகள். ஏராளமான புத்தகங்கள் வரிசையாக நின்றிருந்தன.

எதிர்புறச் சுவர் ஓரமாக நான்கு கம்ப்யூட்டர்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தன. அந்த கம்ப்யூட்டர் டேபிளின் கீழ்த்தட்டில் பிரின்டர், ஸ்கேனர், சிடி, டிவிடி இத்யாதி . . . . இத்யாதி . . .

அறையின் நடுவில் ஒரு மேசை. சுழல் நாற்காலி. மேசையின் மேல் சில காகிதங்கள் எழுதப்படுவதற்காக காத்திருந்தன.

மேசைக்குப் பின்னால் ஒரு உயரமாக கட்டில் போன்ற ஏதோ ஒன்று போடப் பட்டிருந்தது. அதன் தலைப் பகுதியில் ஒரு உயரமான ஸ்டான்ட் பொருத்தி அதன் மேல் ஈ.ஸிஜp மானிட்டர் போல ஒன்றையும் மாட்டி வைத்திருந்தார்கள்.

அனந்த் புத்தக அலமாரியைக் குடைந்து கொண்டிருந்தான்.

தினேஷ் கட்டிலின் பக்கத்தில் போய் நின்றhன்.

பிந்து. இது என்ன கட்டில் ?

எனக்கு இதைப்பத்தி அதிகமா எதுவும் தெரியாது. அதான் அப்பாவோட ஸ்டூடன்ட் ஒருத்தரை வரச் சொல்லியிருக்கேன். அவர்கிட்டே பேசினா உங்களுக்கு உபயோகமா ஏதாவது தகவல் கிடைக்கலாம்.

தினேஷ் அந்தக் கட்டிலைப் பரிசோதித்தான். கட்டிலில் கிடந்த கேபிள் அனைத்திலும் ஊசி போன்ற முனைகள் அமைக்கப் பட்டிருந்தன. அந்தக் கேபிள்கள் கூட்டமாகப் பயணித்து ஸுட்கேஸ் போன்ற ஏதோ ஒரு வஸ்துவில் நுழைந்தன. ஸுட்கேஸிலிருந்து பயணப் பட்ட மற்றெhரு ஒற்றைக் கேபிள் ஒரு கம்ப்யூட்டரில் நுழைந்தது.

காலடிச் சத்தம் கேட்டு மூன்று பேரும் திரும்பினார்கள்.

இவர்தான் சந்தீப், அப்பாவோட ஸ்டூடன்ட். பிந்து புதியவனை அறிமுகம் செய்து வைத்தாள்.

சந்தீப் உயரமாக இருந்தான். வெளிற வைக்கப் பட்ட நீல நிற ஜPன்ஸும், ரத்தச் சிவப்பில் டி சர்டும் அணிந்திருந்தான். பிரேம் இல்லாத கண்ணாடி சீராகக் கத்தரிக்கப் பட்ட மீசை என்று ஹீரோ மாதிரி இருந்தான்.

சந்தீப் இருவருடனும் கை குலுக்கினான்.

சந்தீப், டாக்டர் ஸ்ரீதரனோட ஆராய்ச்சி பத்தி உங்ககிட்டே சில விஷயங்கள் கேட்கலாமா ? - தினேஷ்

கண்டிப்பா. அவர் என்னோட குரு. ரொம்ப புத்திசாலி. கம்ப்யூட்டர் நாலெட்ஜும் பயோ-இன்பர்மேடிக்ஸ் நாலெட்ஜும் சேர்ந்தாற் போல அவர்கிட்டே இருந்தது.. இந்த ரிஸர்ச் மட்டும் சக்சஸ் அனா உலகத்திலே இருக்கிற எல்லாப் பைத்தியங்களையும் சாpபண்ணிடலாம். அதோட கோமா பேஷன்டுகளுக்கு ஒரு அருமையான டிரீட்மென்ட் முறை கிடைச்சிருக்கும்.

அவருக்கு நோபல் பரிசு கூடக் கிடைச்சிருக்கும் சார். அவரப் போய் இந்த அன்பு ஏன் கொன்னான்னு தெரியலே சார்.

நான்கு பேரும் மேசையைச் சுற்றி ஆளுக்கொரு நாற்காலியைப் போட்டு உட்கார்ந்தார்கள்.

அனந்த் ஒரு காகிதத்தில் குறிப்பெடுக்கத் தொடங்கினான்.

உங்களுக்கு டாக்டர் ஸ்ரீதரனை எப்படித் தெரியும் ?

நான் ஒரு பயோ-இன்பர்மேடிக்ஸ் பட்டதாரி. இப்போ பி.எச்டி பட்டத்துக்காக ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கிறேன். எங்க பல்கலைக் கழக விதிப்படி இரண்டு கைடு வேணும். டாக்டர் ஸ்ரீதரன் எனக்கு அசோசியேட் கைடு.

அப்போ உங்க மெயின் கைடு யாரு ?

டாக்டர் சந்திரன். பிந்துவோட சீ்ப் டாக்டர்.

ஓ . . . எஸ். உங்களோடது என்ன ஆராய்ச்சின்னு சொல்ல முடியுமா ?

மனுஷனோட மூளையிலே இருந்து நரம்பு மண்டலம் வழியா சைகைகள் எப்பிடி உடலோட மத்த உறுப்புகளுக்கெல்லாம் போகுதுன்னு ஆராய்ச்சி பண்ணினோம். இந்த வகையிலே நானும் டாக்டரும் நிறைய ஆராய்ச்சிக் கட்டுரையெல்லாம் எழுதியிருக்கோம். மொத்தம் பதினோரு கட்டுரைகள்,

கட்டுரைகள்ல கம்ப்யூட்டர் பத்தியெல்லாம் இருக்கே. புரோகிராமிங்கெல்லாம் நீங்க எழுதுவீங்களா ? - அனந்த் கேட்டான்.

பயோ-இன்பர்மேடிக்ஸ்தான் நான். புரோகிராம் எல்லாம் மஞ்சுளாதான் எழுதுவா. சந்தீப் தொடர்ந்தான்.

ஓகோ. உங்க ஆராய்ச்சியை டாக்டர் முடிச்சுட்டாரா ? இல்லே இன்னும் மீதி இருக்கா ?

கிட்டத்தட்ட முடிச்சுட்டோம்.

உங்க ஆராய்ச்சியோட குறிக்கோள் என்ன ? எதைச் சாதிக்கறதுக்காக நீங்க ஆராய்ச்சி பண்றீங்க ?

சந்தீப் லேசாகத் தயங்கினான்.

டாக்டர் இதை வெளியே சொல்லக் கூடாதுன்னு சொன்னார். ஆனா இப்போ அவரே உயிரோட இல்லை. அவர் கொலையானதுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்கவாவது நான் சொல்றேன்.

அதாவது என்னோட ஆராய்ச்சியோட நோக்கம் என்னன்னா . . . . .

மனுஷனோட மூளை உடம்போட ஒவ்வொரு உறுப்புக்கும் தகுந்த மாதிhp சைகைகளை நரம்பு மண்டலம் வழியா அந்தந்த உறுப்புக்கு அனுப்பும். அந்த சைகைதான் அந்த உறுப்புக்கு கட்டளைத் தொடர்.

அதாவது கம்ப்யூட்டருக்கு சாப்ட்வேர் மாதிரி – அனந்த்

எஸ். எந்த உறுப்புக்கு சைகை கிடைக்காம போனாலும் அந்த உறுப்பு ஆரோக்கியமா இருந்தாக் கூட, செய்முறை தொpயாததால இயங்க முடியாது.

கம்ப்யூட்டர்லே எல்லாமே 1, 0 ன்னு இரண்டு குறியீடுகளை வச்சு நடக்கிற மாதிhp இந்த பயோ-இன்பர்மேடிக் சைகை, தகவல் எல்லாமே நான்கு குறியீட்டிலே இருக்கும். A, T, G, C தான் அந்த நான்கு. டி.என்.ஏ கூறுகள்னு சொல்லலாம். அடினைன், தையமின், குவானைன், சைட்டசின் - அப்பிடின்னு சொல்லுவாங்க.

இந்த சைகைகளை கையாள்வதைப் பற்றிதான் நான் கண்டுபிடித்தேன். இந்த சைகைகளையும் தகவல்களையும் நல்ல திறமையாகச் செயல்படும் மூளையிலிருந்து எடுத்து ஒரு சிடி தட்டிலோ டிவிடி தட்டிலோ சேமிக்க முடியுமா ?

அதற்குத்தான் நான் டாக்டர்ஸ்ரீதரனிடம் வந்தேன்.

தினேஷும் அனந்தும், ஏன் பிந்து கூட அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்தாள்.

இது சாத்தியமா ? - தினேஷ்

டாக்டர் இதை சாத்தியமாக்கி விட்டார், அவரோட கடைசி ஆராய்ச்சிக் கட்டுரை அதுக்கும் மேலே.

சந்தீப் தொடர்ந்தான்.

கம்ப்யூட்டருக்கு விண்டோஸ் மாதிரி. டாக்டர் மனுஷ மூளைக்கு ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் புரோகிராமே ரெடி பண்ணிட்டார்.

மனநிலை சரியில்லாத ஓரு ஆளோட மூளையிலே இருந்து மொத்த சிஸ்டத்தையும் அழிச்சுட்டு புதுசா ஆப்பரேட்டிங சிஸ்டத்தைப் பதிவு பண்ணிடலாம். மனுஷன் புதுசாப் பொறந்தமாதிரி ஆயிடுவான்.

அப்போ அன்புவையும் அப்பா அப்பிடித்தான் சரிபண்ணினாரா ? - பிந்து

ஆமா. அவனை இந்தக் கட்டில்லேதான் படுக்க வச்சு ஒரு கம்ப்யூட்டர் மூலமா ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மாத்தினோம்.

அதன் பிறகு எப்படி அந்தக் கருவிகளை இயக்குவது என்று ஒரு அரை மணிக்கு சந்தீப் விவாpத்தான். சிடி வகையறhக்களை எடுத்துக் காட்டினான்.

ஓகே. . . சந்தீப் நாங்க புறப்படுறேhம். ஏதாவது ஹெல்ப் வேணும்னா கால் பண்ணலாமா ? ஷ்யூர் தினேஷ் . . . . காத்திருக்கிறேன்.

செல்பேசி எண்களைப் பரிமாறிக் கொண்டு விடைபெற்றhர்கள்.

செவ்வாய், 5 அக்டோபர், 2010

ஒரு சைபர் குற்றம் - 2

ஒரு சைபர் குற்றம் - 1

தினேஷ் இந்த வாரம் முடிக்க வேண்டிய ஒரு கேஸ் ்பைலை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

அனந்த் சுவாரஸ்யமாக யாரோ ஒரு பெண்ணிடம் கம்ப்யூட்டரில் சாட் செய்து கொண்டிருந்தான்.

அனந்த். இந்தக் கேஸ் டீட்டெயில்ஸ் எல்லாம் டாக்குமென்ட் பண்ணச் சொல்லி சொல்லியிருந்தோமே. தீபா அதை முடிச்சிட்டாளா ?

நேத்தே பாத்துட்டேன் பாஸ். கரெக்ஷன்ஸ் குடுத்திருக்கேன்.

குட். இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள பிரின்ட் பண்ணிடு.

ஓ.கே. பாஸ், நம்ம தீபா சில காரியங்களை சரியாப் பண்தில்லை கொஞ்சம் டிரெயினிங் குடுக்கலாம்னு இருக்கேன்.

அப்பிடியா ? எனக்கு என்னமோ அவ பெட்டரா பண்ற மாதிரிதான் தெரியுது.

இல்ல பாஸ். நீங்க பொண்ணுங்களை சரியாவே கவனிக்கறது இல்லை. இன்னைக்கு கூட பாருங்க. அவ ்பேஸ் ஷேப்புக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாம ஆரஞ்ச் கலர்லே போய் லிப்ஸ்டிக் போட்டிருக்கா.

தினேஷ் முறைத்தான். கையில் என்ன அகப்படும் என்று தேடிய போது கதவு தட்டப்பட்டது.

தினேஷ் “எஸ்” என்க தீபா ஆரஞ்ச் கலர் லிப்ஸ்டிக்குடன் எட்டிப்பார்த்தாள்.

பாஸ் நான் சொல்லலே.

யூ ஷட்டப் அனந்த். நீ சொல்லு தீபா.

சார். உங்களப் பாக்க ஒரு பொண்ணு வந்திருக்காங்க. வரச்சொல்லவா ?

வரச்சொல்லு.

இல்ல பாஸ், தீபா நம்ம ஸ்டெனோ மட்டுமில்லே. ரிஸப்ஷன்லே உக்காந்து கிளையன்ட்ஸையும் அட்டன்ட் பண்றதாலே, நயன்தாரா மாதிரி இல்லாட்டியும் ஒரு . . . . .

அவள் உள்ளே நுழையவும் அனந்த் நிறுத்தினான்.

தினேஷ் அவளை நிமிர்ந்து பார்த்தான்.

கோதுமை நிறம். உயரம் ஐந்தரை அடி இருக்கும். வெளிர் மஞ்சள் நிற சேலையில் வந்திருந்தாள். முகத்தில் குழப்பம், மெலிதான சோகம் எல்லாம் கலந்து தெரிந்தன.

பாஸ் நான் சொல்லலே, இவங்கதான் அது..

தினேஷ் குழப்பமாகப் பார்த்தான். நயன்தாரா ?

சாரி பாஸ் நீங்க ரொம்ப வீக், நயன்தாராவைக் கூடவா தெரியாது ? காலைல சொன்னேனே. பிந்து. இவங்கதான்.

அனந்த் அவளிடம் திரும்பி, “சாரி மிஸ் பிந்து.. அதிகாலைல நியூஸ் பாத்தேன். வெரி சாரி.

அப்புறம் மிஸ்தானே”

அவள் ஆம் என்று தலையசைத்தாள்.

இல்ல ஏதோ நயன்தாரான்னு . . . .

அது ஒண்ணுமில்லே. பாஸுக்கு நேத்து பாத்த செகண்ட் ஷே பத்தி சொல்லிட்டிருந்தேன். நீங்க உக்காருங்க.

அவள் தயக்கமாக நாற்காலியின் நுனியில் உட்கார்ந்தாள்.

தினேஷ் ஆரம்பித்தான்.

சொல்லுங்க மிஸ். பிந்து.

எங்க அப்பாவோட மரணத்துக்குக் காரணம் என்னன்னு தெரிஞ்சுக்கணும். அதுக்கு உங்களோட உதவி எனக்கு வேணும்.

உங்க அப்பாவோட கொலை வழக்கு ரொம்ப கிளியரா இருக்கு. அன்பு ஒரு மனநோயாளி. மந்திரியும் அதைத்தான் நிருபிப்பார். அன்பு ஒரு மனநோயாளி இல்லை அப்டிங்கறதுக்கு உங்ககிட்டே ஏதாவது பாயின்ட் இருக்கா ?

தேவையில்லே. ஏன்னா அன்பு மனநோயாளியாதான் இருந்தார். எனக்கும் அது நல்லாத் தெரியும். நான் ஒரு மனோத்துவ டாக்டர். அவர் என்னோட பேஷன்ட்தான்.

அப்பிடின்னா கேஸ் ரொம்ப கிளியரா இருக்கே.

ஆனா கொலை செய்யும் போதும் சரி இப்பவும் சரி அன்பு ஒரு மனநோயாளி இல்லை.

தினேஷும் அனந்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

அனந்த் மறுபடியும் கம்ப்யூட்டரில் ஆழ்ந்தான்.

உங்கப்பா ஒரு கம்ப்யூட்டர் புரொபஸரா ?

ஆமா.

எந்த காலேஜுல இருக்கார். சாரி இருந்தார் ?

எங்கேயும் வேலை பாக்கலே. சும்மா விசிட்டிங் புரொபஸரா நிறைய காலேஜஸுக்கு போவார்.

எங்கேயும் வேலை பாக்காததுக்கு ஏதாவது விசேஷமான காரணம் உண்டா ?

அவள் தயங்கினாள்.

அவருக்கு ஒரு ரிஸர்ச் லேப் வீட்டிலேயே இருக்கு. அங்கதான் அவர் ரிஸர்ச்சிலே அதிக நேரம் கழிப்பார்.

என்ன ரிஸர்ச் ?

பைத்தியங்களைப் பத்தி ரிஸர்ச் பண்றதாவும், இந்த ரிஸர்ச் மட்டும் சக்ஸா; ஆனா உலகத்திலே இருக்கிற எல்லாப் பைத்தியங்களையும் சரிபண்ணிடலாமுன்னும் சொல்வார். அன்புவைக் கூட அவர்தான் குணப்படுத்தினார்.

உங்கப்பா ஒரு கம்ப்யூட்டர் புரொபஸரா ? இல்லே மனோத்துவ டாக்டரா ?

கம்ப்யூட்டர் புரொபஸர்தான். எங்க சீனியர் மனோத்துவ டாக்டர் சந்திரன் கூடச் சேர்ந்துதான் ரிஸர்ச் பண்ணிட்டிருந்தார்.

தினேஷ் யோசனையில் ஆழ்ந்தான்.

சரி மிஸ் பிந்து. நாங்க உங்கப்பாவோட லேபைப் பாக்கணும். அது என்ன ஆராய்ச்சின்னு முதல்ல கண்டுபிடிக்கணும். அப்புறம் நாம யார் யாரையெல்லாம் விசாhpக்கறதுன்னு யோசிக்கலாம். இப்போ நீங்க புறப்படுங்க.

அனந்த் கம்ப்யூட்டரிலிருந்து தலையை வெளியே நீட்டினான்.

மிஸ் பிந்து, நான் ஒரு கேள்வி கேக்கலாமா ?

கேளுங்க.

நானும் வந்ததிலேயிருந்து கவனிச்சேன். அதெப்பிடி கொஞ்சம் கூட மலையாள வாசனையே இல்லாம சுத்ததமா தமிழ் பேசறீங்க ?

அனந்த் . . . . . தினேஷ் அதட்டினான்.

நான் பொறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான் . . . .

அவள் லேசாக சிரித்துக் கொண்டே எழுந்து கொண்டாள்.

ஏன்டா அனந்த், கொஞ்சமாவது சீரியசா இரேன். எப்பவும் உனக்கு காமெடிதானா.

சீரியசாத்தான் வேலை செஞ்சிருக்கேன். மொத்தம் பதினோரு ஆராய்ச்சிக் கட்டுரைகள் பாஸ், சந்தீப் - னு ஒரு அசிஸ்டன்ட் இருக்கான். அவனைப் புடிச்சு கேட்டாத்தான் கொஞ்சமாவது இந்த ஆராய்ச்சி எழவெல்லாம் நமக்குப் புரியும்.

உனக்கு எப்பிடிடா தெரியும் ? - தினேஷ்

இப்போ நீங்க பிந்துகிட்டே பேசிட்டிருந்தப்போ நான் இன்டர்நெட்டிலே தேடி எடுத்தேன். இவங்க எல்லாரோட ப்ரொ்பலும் அங்க இருக்குது பாஸ். சந்தீப் ஒரு பயோ-டெக்னாலஜpஸ்ட்.

கம்ப்யூட்டர் புரொபஸருக்கு எதுக்குடா பயோ-டெக்னாலஜp அசிஸ்டன்ட் ? ஏதாவது லிங்க் ?

யோசிக்கலாம் பாஸ். . . . புரொபஸரோட லேப்லே தேடிப் பாத்தா ஏதாவது லிங்க் கிடைக்கும்.

அதோட மஞ்சுளாவையும் சந்திச்சு பேசிறணும்.

அது யார்ரா மஞ்சுளா ?

ஆராய்ச்சிக் கட்டுரை எல்லாத்திலேயும் மஞ்சுளாவோட பேரும் இருக்கு பாஸ். அதனால அவங்களையும் ஒரு வாட்டி நாம சந்திச்சுப் பேசிரலாம்னு தோணுது.

கில்லாடிரா நீ . . . .அப்போ லிஸ்ட் ரெடி. லேப் . . . . சந்தீப் . . . . . மஞ்சுளா . . . . .

எஸ் பாஸ்.

************************************************************************************

ஒரு சைபர் குற்றம்

அதிகாலை மணி எட்டு.

கதிரவன் எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு சுறுசுறுப்பாக அன்றையக் கடமையை ஆரம்பித்ததில் டிசம்பர் மாதத்துப் பனி சன்னமாக விலகி சென்னை வெயில் தன் வேலையைக் காட்டத் தொடங்கியிருந்தது.

தினேஷ் குளித்து முடித்து அறையிலிருந்து வெளிப்பட்டான். படிகளில் தடதடத்து தரையைத் தொட்டான்.

சோபாவில் அழுக்கு அனந்த் கையில் டீவி ரிமோட்டுடன் இன்னும் தூக்கத்திலிருந்தான்.

ராத்திரி முழுக்க மிட்நைட் சாங்ஸ் பாக்க வேண்டியது. காலைல இப்பிடித் தூங்க வேண்டியது.

என்னடா அனந்த், இன்னும் நீ எழுந்திரிக்கலியா. இது வீடு மட்டுமில்லே. நம்ம ஆபீஸும் இதான். எழுந்திருடா.

திறந்திருந்த ஜன்னல் வழியாக இறைந்திருந்த தினசரிகளையும் சஞ்சிகைகளையும் பொறுக்கிக் கொண்டு தினேஷ் சோபாவில் சரிந்தான்.

அனந்த் சோம்பல் முறித்துக் கொண்டான்.

என்ன பாஸ், மிட்நைட் சாங்ஸை அப்பிடியே கன்டினியூ பண்ணிட்டிருந்தேன். இப்பிடி பூஜ வேளைல பூந்து கெடுத்திட்டீங்களே.
நம்ம நமீதா இருக்காங் களே . . . என்ன அருமையான . . .

சட், அனந்த். போதுண்டா. இன்னும் பத்து நிமிஷத்திலே நீ ஆபீஸ்ரூம்ல இருக்கிறே. போடா.

டான்ஸ் ஸடெப்ஸ் தெரியுமான்னு சொல்ல வந்தேன். என்ன பாஸ் நீங்க ?

தெரியுண்டா உன்னை - தினேஷ் தினசரி ஒன்றைத் தூக்கி அவன் மேல் எறிந்தான்.

அனந்த் அதைக் காட்ச் பிடித்து சத்தமாக ஹெட் நியூஸ் படித்தான்.

டாக்டர் ஸ்ரீதரன் நம்பியார் படுகொலை. சுட்டுக் கொன்ற அமைச்சர் இளவேந்தன் மகன் அன்பு கைது. என் மகன் ஒரு மன நோயாளி. அமைச்சர் இளவேந்தன் நாடகம்.

ரொம்ப பழைய நியூஸ். ராத்திரி பூரா சன் மியூசிக் சேனல்லே ்ப்ளாஷ் நியூஸ் இதான் பாஸ்.

யார்ரா டாக்டர் ஸ்ரீதரன் ? மென்டல் ஸ்பெஷலிஸ்ட்டா ?

இல்லே பாஸ். இவரு ஒரு பி.எச்டி டாக்டர். ஐஐடீ, அண்ணா யுனிவர்சிட்டிலேயெல்லாம் விசிட்டிங் புரபஸர். அமெரிக்காலே எம். எஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ். நேத்தே சன் நியூஸ்லே
பாத்துட்டேன். பாவம் பாஸ் பிந்து. அவ அழுததைத்தான் என்னாலே தாங்க முடியலே.

பிந்துவா ? யார்ரா அது ?

டாக்டரோட மகள் பாஸ். ஒரு இருவத்தெட்டு இருக்கும். . . . . . . . . வயசு.

சட் - தினேஷ் வாரப் பத்திரிக்கை ஒன்றைத் தூக்கி அவன் மேல் எறிய, அனந்த் அதைக் காட்ச் பிடித்துக் கொண்டு ஹhலை ஒட்டிய அவனுடைய அறைக்குள் மறைந்தான்.

************************************************************************************