மதிப்புக்கூட்டுறதுன்னா என்ன ?
ஒரு பொருளோட விலை மதிப்பு எதனால அதிகமாகுது ? அந்த அதிகப்படியான விலையை நீங்க முழு மனசோட குடுப்பீங்களா ?
இந்த பேச்சு வார்த்தைகளைக் கொஞ்சம் கவனிங்க.
=========================================================================
பூ எவ்வளவுங்க ?
உதிரிப்பூ 100 கிராம் முப்பது ரூபாய் ? கட்டுனது முழம் இருபது ரூபாய். உங்களுக்கு எப்பிடிம்மா வேணும் ?
அப்போ 200 கிராம் கட்டுனா முணு முழம் வருமா ?
என்னம்மா . . . இது என்ன பெருக்கல் கணக்குப் போட்டுப் பண்ணுற வியாபாரமா ? கட்ற கூலி போக்கு வரத்து செலவெல்லாம் வேணுமுங்களே.

உளுந்தம் பருப்பு எங்க இருக்குதுங்க ? கிலோ என்ன விலை ?
எண்பத்தஞ்சு ரூபாய். அரை கிலோ பாக்கட் கூட இருக்குது மேடம். எத்தனை பாக்கட் வேணும் ?
என்னப்பா இது . . . கடைல எழுபத்தேழுக்கு இருக்கே. பாக்கட் போட்டு ஏஸி ஹhல்லே வச்சுட்டு எட்டு ரூபாய் ஏத்தறீங்களே.
இல்லே மேடம். கடையை விட இது நல்லா இருக்கும். பாலிஷ் பண்ணி, சுத்தப் படுத்தி பாக்கட் போட்டு வச்சிருக்கோம். நல்ல நயம் பருப்பு மேடம்.
சுத்தப்படுத்தறது சரி. ஆனா பாலிஷ் போடறதும் பாக்கெட்ல போடறதும் எங்களுக்கு என்ன பிரயோஜனம். பளபளன்னு பார்க்க அழகா இருக்கும். வேகவச்ச பிறகு எல்லாமே ஒண்ணுதானே.

காய்கறி விலையெல்லாம் பாத்தீங்களா ?
என்ன பண்றது ? வாங்கித்தானே ஆகணும்.
போற போக்கப் பார்த்தா தோட்டத்திலேயேதான் போய் வாங்கணும் போலிருக்கு. அப்பதான் ஓரளவுக்கு வாங்கற மாதிரி விலை இருக்கும் போல.
அது சரிதான். இந்த லாரி டிரான்ஸ்போர்ட் செலவாலேதான் விலையெல்லாம் ஏறுது. போறரததுக்கு ஏஜெண்ட் கமிஷன், கோடோன் வாடகைன்னு, ஏத்தற கூலி, இறக்குற கூலின்னு வேறே. ஆனா பாத்தீங்கன்னா தோட்டத்துல கிடைக்கிற அதே காய்கறிதான் . . . அதே ருசிதான். சொல்லப் போனா தோட்டத்துல இன்னும் பிரஷ்ஷhவே கிடைக்கும்.
அது சரி. அதுக்காக ஒரு கிலோ கத்தரிக்காய்க்காக பக்கத்து கிராமத்து தோட்டத்துக்கா போகமுடியும் ? இல்லே சென்னைல காய்கறித்தோட்டம்தான் போடமுடியுமா ?

என்ன சார். பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல் நடவடிக்கைன்னா என்னன்னு லேசா புரியற மாதிரி இருக்குதா ?
இந்தப் பூ கதையைப் பாருங்க. உதிரிப்பூ பூமாலையாவோ பூச்சரமாவோ ஆகுது. அதாவது கச்சாப் பொருள் உபயோகப் படற ஒரு பொருளா மாறுது. அதோட விலை மதிப்பு ஏறலாம். நாமளும் சந்தோஷமா அதற்கான விலையைக் கொடுக்கலாம்.
ஆனா இந்தப் பருப்பு ? பாலிஷ் போடறது வெறும் அலங்காரம். பாக்கெட் போடறது வியாபாரிக்கு மிச்சம். நிறுக்க வேண்டியதில்லை. கட்ட வேண்டியதில்லை. போக்குவரத்திலே சேதமாகறதில்லை. சிந்தாம சிதறhம கோடோன்லே இருந்து கஸ்டமர் வீட்டு வரைக்கும் பத்திரமாப் போய்ச் சேர்ந்துடும். ஆனா இது அத்தனைக்கான செலவும் பருப்போட விலைலதான் ஏறும்.
பூ வியாபாரத்திலே பொருளோட மதிப்பைக் கூட்டற நடவடிக்கைகள் இருக்கு.
ஆனா பருப்பிலே ? . . . நாம எல்லாரோட வசதிக்காகவும் சில வேலைகள் செஞ்சாலும் அது பருப்போட தரத்தையோ மதிப்பையோ கூட்டப் போறதில்லை. ஆனா நாம அந்த செலவையும் பருப்போட விலையோட குடுக்கத்தான் வேண்டும்.
ஆக . . . கச்சாப் பொருளைக் கொஞ்சமாவது உறுமாற்றமோ அல்லது குணநலனில் மாற்றமோ செய்யக் கூடிய நடவடிக்கைதான் மதிப்பு கூட்டும் நடவடிக்கை.
அப்படிச் செய்யாத எந்த நடவடிக்கையுமே மதிப்புக் கூட்டும் நடவடிக்கை இல்லை. அது மட்டுமில்லை. இப்படிப் பட்ட மதிப்பு கூட்டாத நடவடிக்கைகளை உற்பத்தித் துறையில் ஒரு பெயர் கொண்டு அழைக்கிறhர்கள்.
வேஸ்ட். . . . . அதாவது . . . கழிவு . . . . . . தவிர்க்கப் படவேண்டிய நடவடிக்கை. அல்லது குறைக்கப் படவேண்டிய நடவடிக்கை.
இப்படிப் பட்ட நடவடிக்கைகளை அடையாளம் கண்டு அவற்றைத் தவிர்க்கவோ குறைக்கவோ முயற்சிப்பதுதான் . . . . . நம்முடைய பாடத்திட்டத்தோட நோக்கம்.
அப்புறம் அந்தக் காய்கறி வியாபாரம் பத்தி ஒண்ணுமே சொல்லலியே ?
பின்னாலே உபயோகமா இருக்கும்னு இப்போ லேசா ஆரம்பிச்சு வச்சேன். மறுபடியும் வேறே சில விஷயங்களைப் புரிஞ்சுக்கறதுக்கு கண்டிப்பாத் தேவைப் படும். அப்போ பாக்கலாம். சரிதானே ?
(இன்னும் வரும்)

1 கருத்து:
Lean Thathuvam is in its full swing sir :-....... Interesting . waiting for the next episode...........
கருத்துரையிடுக