Falls

Falls
5 Falls

ஞாயிறு, 24 மே, 2009

இழந்தது என்ன ?

அதிகாலை மணி 4 45. (சென்னையில்)

கத்தார் ஏர்வேஸ் விமானம் மெதுவாகப் பின்னோக்கி நகர்ந்து ரன்வேயில் நிலைகொண்டு, வேகமாக ஓடி ஆகாயத்தில் தாவியது.. முட்டை வடிவ ஜன்னலுக்கு வெளியே சோடியம் விளக்குப் புள்ளிகளுடன் சென்னை நகரம் மெல்ல மெல்ல சிறிதாகிக் கொண்டிருந்தது.

ஸ்பீக்கர் கரகரக்க கேப்டன் தன்னையும் சக விமான ஊழியர்களையும் உடைந்த ஆங்கிலத்தில் அறிமுகம் செய்தார். சற்று நேரத்தில் காலை உணவு வழங்கப் படும் என்றும், பயணிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

விமானம் வட்டமடித்து மேற்குத் திசையில் திரும்பி லண்டன் நகரை நோக்கிப் பறக்கத் தொடங்கியது.

நான் நன்கு சாய்ந்து உட்கார முயற்சித்தேன். எகானமி வகுப்பு இருக்கை அந்த வசதியைக் கொடுக்கவில்லை. முடிந்த வரையில் வசதியாக உட்கார்ந்து கொண்டேன்.

இதுதான் என்னுடைய முதல் விமானப் பயணம்.

முதல் விமானப் பயணமாக இருந்தாலும் என்னால் இந்தப் புதிய அனுபவத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. மனம் ஏனோ கனத்துக் கிடந்தது.

கடந்த நான்கு மாதத்தில் நடந்து முடிந்த நிகழ்ச்சிகள் இந்த விமானப் பணிப்பெண் கொடுத்த புளிப்பு மிட்டாய் போலவே புளிப்பானதுதான்.

ஆனாலும் என்னுடைய மனம் அதனைத் திரும்பிப் பார்ப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை.

_____________________________________________________________________________________

பொங்கல் விடுமுறை முடிந்து ஆபீஸுக்கு வந்து என்னுடைய கம்ப்யூட்டரைத் திறந்தேன். முதலில் ஈமெயில்களைப் பார்ப்பதுதான் வழக்கம். என்னுடைய பிராஜக்ட் மேனேஜர் ஒரு ஈமெயில் சிவப்புநிற எழுத்துக்களோடு அனுப்பியிருந்தார்

சிவப்பு மிகவும் முக்கியம் என்று அர்த்தம்.

திறந்து பார்த்தேன். இன்னும் சொன்னால் அது ஒரு ஈமெயில் இல்லை. தனியே சந்திப்பதற்காக ஒரு மணி நேரம் ஒதுக்கி, வரமுடியுமா என்று அழைப்பு அனுப்பியிருந்தார்.

குறித்த நேரத்தில் அவருடைய அறையின் கண்ணாடிக் கதவைத் தட்டி விட்டு நுழைந்தேன்.

வாங்க எம். கே. எழுந்து கை குலுக்கினார். இருவரும் எதிரெதிரே உட்கார்ந்தோம்.

நேராகவே விஷயத்திற்கு வந்தார்.

நம்ப பிராஜக்ட்டோட காஸ்டைக் குறைக்கணும்னு அக்கவுண்ட்ஸ் மானேஜர் நினைக்கிறhர். அதனால டீம்லே அதிகமா புதுப் பசங்களை எடுக்கலாம்னு ஒரு ஐடியா இருக்கு. ஒரு சீனியர் டீம் மெம்பரா உங்க ஒப்பீனியன் என்ன ?

நான் லேசான குழப்பத்துடன் உட்கார்ந்திருந்தேன்.

என்ன சொல்வதென்று எண்ணிக் கொண்டு சம்பந்தமில்லாமல் புன்னகைத்து வைத்தேன்.

அவர் தொடர்ந்தார்.

இப்போ நம்ப டீம்லே நீங்க, ரவி, சுபா மூணு பேரும்தான் அதிகமா பில்லாகிற சீனியர் மெம்பர்ஸ். இப்போ அடுத்த லெவல்லே ஓப்பனிங் எதுவும் இல்லை. அதனால உங்க மூணு பேர்ல ஒருத்தரை மட்டும்தான் நம்ப அக்கவுண்ட்லே இதே லெவல்லே வச்சிக்க முடியும்.

எனக்கு லேசாக வியர்க்க ஆரம்பித்தது. ஆக . . . . உலகப் பொருளாதாரத் தேக்கம் என்னுடைய வேலையையும் தொட்டுவிட்டதா ?

வீட்டுக் கடன், அம்மா அப்பாவின் மெடிக்கல் இன்ஷுரன்ஸ், குழந்தைகளின் கான்வென்ட் படிப்பு எல்லாம் என்னுடைய மனதில் வேகமாக வந்து போனது.

மூணுபேர்ல கம்மியான காஸ்ட் சுபாதான். அதனால அவங்களை விட்டுட்டு உங்க ரெண்டு பேரையும் மூவ் பண்ணலாம்னு நாங்க டிசைட் பண்ணியிருக்கோம்.

நீங்க போன வருஷம் அப்ரைசல்லே நல்ல ஸ்கோர் வாங்கியிருக்கீங்க. சர்ட்டிபிகேஷன் எல்லாம் முடிச்சிருக்கீங்க. புரோகிரஷன் டெஸ்டெல்லாம் கூட பாஸ் பண்ணியிருக்கீங்க.

அதனால.. நீங்க வேறே பிராஜக்ட்லே ஹையர் லெவல் டிரை பண்ண ஆரம்பிக்கணும். எத்தனை நாளைக்குதான் இப்பிடியே இருக்க முடியும். நீங்களும் மேனேஜர் ஆக வேண்டாமா ? ஒரு மூணு மாசம் டைம் போதுமா ?

எனக்கு என்ன சொல்வதென்று தொpயவில்லை. குழப்பத்துடன் தலையசைத்தேன்.

பின்பு மெதுவாகக் கேட்டேன். மூணு மாசத்திலே எதுவும் கிடைக்கலேன்னா ?

பிராசஸ் படி பார்த்தா பென்ச்லே போட்டுருவாங்க. திங்க் பாஸிட்டிவிலி எம். கே. இதெல்லாம் உங்களுக்கு ஒரு சேலன்ச். நாமளும் ஒரே இடத்துல ரொம்ப வசதியாக செட் ஆனதால ஒரு மாற்றத்தை விரும்பாமலே ஓட்டிக்கிட்டிருக்கோம். அது நல்லதில்லே. மாற்றம் இருந்தாத்தான் முன்னேற்றமும் வரும். ஆல் தி பெஸ்ட்.

அவர் எழுந்து கை குலுக்கினார்.

நானும் எழுந்து கை குலுக்கிவிட்டு அவருடன் வெளியே வந்தேன்.

அவர் வெளியே நின்றிருந்த ரவியை கை குலுக்கி உள்ளே அழைத்துச் சென்றhர்.

கண்ணாடிக் கதவு எனக்குப் பின்னால் சப்தமில்லாமல் மூடிக் கொண்டது.

_____________________________________________________________________________________

ஏஸி லேசான சத்தத்துடன் ஓடிக் கொண்டிருந்தது. ஏன்னுடைய மகனும் மகளும் பக்கத்துக்கு ஒருவராக மார்பில் தலை வைத்து நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அருகில் என்னுடைய மனைவி திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள்.

இப்போ என்னங்க பண்ணறது. திடீர்னு இப்பிடிச் சொல்றீங்க.

நான் லேசாகச் சிhpத்தேன்

இந்தக் குழந்தைகளப் பாரு. அப்பா இருக்கேன்கிற நினைப்பிலே எவ்ளோ நிம்மதியா தூங்கறhங்க. நான்தான் தீவிரமா முயற்சி பண்ணி ஏதாவது செய்யணும். இன்னும் நிறையப் படிக்கணும். இன்டர்வியூ எல்லாம் கிளியர் பண்ணணும்.

அப்போ வேறே கம்பெனி போகலாம்னு சொல்றீங்களா ?

தொpயலே . . . ஆனா அதையும் யோசிச்சுதான் செய்யணும். இப்போ எந்தக் கம்பெனியும் யாரையும் எடுக்க மாட்டாங்க. எடுத்தாலும் என்னை மாதிhp அதிக அனுபவமுள்ளவங்களை கண்டிப்பா எடுக்க மாட்டாங்க. இ ங்கயே வேறே பிராஜக்ட் ஏதாவது தேடணும் . . . .

தேடினேன் . . . . பெங்களுர், புனே, டெல்லி என்றுதான் ஓப்பனிங் வந்தது. நானும் என் மனைவியும் மலைத்துப் போனோம்.

எப்படி சமாளிப்பது ? குடும்பத்தோடு செல்வதா ? குழந்தைகளுடைய படிப்பு என்னவாகும் ?

நானும் என் மனைவியும் உட்கார்ந்து பேசி, ஆலோசித்து, விவாதித்து, குழம்பி இறுதியில் ஒரு தௌpவான முடிவுக்கு வந்தோம்.

எங்கே கிடைத்தாலும் நான் மட்டும் முதலில் போவது. பின்பு வசதிகளைப் பார்த்துக் கொண்டு எல்லோரும் போவதா வேண்டாமா என்று முடிவு செய்யலாம் என்று தீர்மானித்தோம்.

குழந்தைகளிட் சொல்லிப் புhpயவைக்கும் பொறுப்பை என் மனைவி ஏற்றுக் கொண்டாள்.

நானும் ரவியும் சேர்ந்தே முயற்சி செய்தோம். ஒரு புதிய பிராஜக்டில் பிராஜக்ட் மேனேஜர் பதவிக்கு கிளையன்ட் இன்டர்வியூ இரண்டு பேருக்குமே நடந்தது.

எனக்கு பின்னர் தொpவிப்பதாகச் சொல்லி விட்டு, ரவியை உடனே பொறுப்பேற்கச் சொன்னார்கள். சென்னையிலேயே அவனுக்குக் கிடைத்து விட்டது.

ஏன் மனைவி சோர்ந்து போனாள். நான் முன்பைவிடத் தீவிரமாகத் தேட ஆரம்பித்தேன்.

ஏன்னுடைய இடத்திற்கும் ரவியின் இடத்திற்கும் இரண்டு புதிய பெண்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்கு டிரெயினங் கொடுக்கும் பொறுப்பும் எனக்கு வந்து சேர்ந்தது.

பத்து நாட்களுக்குப் பின்பு ரவியின் பிராஜக்டின் கிளையன்ட் கம்பெனி ஈமெயில் அனுப்பியிருந்தது. லண்டனில் அவர்களுடைய சைட்டிலிருந்து சென்னை டீமுடன் வேலை செய்யும் ஆன்சைட் கோஆர்டினேட்டர் பதவி. இரண்டு வருஷத்திற்குப் பிறகு சென்னை வந்து அதே வேலையைச் செய்யலாம்.

இப்போதுள்ள குடும்பச் Nழலில் ஒரு வேலை என்பது முக்கியம். அதை ஒப்புக் கொண்டே ஆகவேண்டிய ஒரு விளிம்பிற்கு நான் தள்ளப் பட்டிருந்தேன்.

பிhpவு தவிர்க்க முடியாததாகி விட்டது.

ரவி ஒருவித பொறhமையுடன் வந்து கைகுலுக்கி வாழ்த்து தொpவித்தான். ஆந்தக் கைகுலுக்கலில் நட்பைக் காண முடியவில்லை.

வீட்டில் பிராட் பாண்ட் இன்டர்நெட் வெப் காமிரா எல்லாம் வாங்கி வைத்து எல்லோருக்கும் எப்படி இயக்குவது என்று சொல்லிக் கொடுத்தேன்.

எல்லோரும் ஆர்வத்துடன் நிறைய கேள்வி கேட்டார்கள்.

என் மகன் கேட்டான். அப்பா இந்தக் காமிரா வழியா உங்களத் தொட முடியுமா ?

என்னால் என்ன பதில் சொல்ல முடியும் ?

இன்று மனைவி, குழந்தைகள், அம்மா, அப்பா, தம்பி எல்லோரும் ஏர்போர்டிற்கு வந்து வழியனுப்பி வைத்தார்கள்.

எத்தனையோ காலமாக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஆன்சைட் வாய்ப்பு கடைசியில் என்னிடம் திணிக்கப் பட்டிருப்பதாக உணர்ந்தேன்.

இது என்ன ? வரமா ?

இதனால் நான் பெற்றது என்ன ? பணமா ? இரண்டாண்டு ஐரோப்பிய வாழ்க்கையா ?

இழந்தது என்ன ? குடும்பத்தின் அண்மை . . . . நண்பனின் நேசம் . . . . இன்னும் எத்தனையோ . . . . . .

என் மகன் கேட்ட கேள்வி நினைவுக்கு வந்தது. இழந்ததே அதிகம் என்பது தௌpவாகத் தொpந்தது.

இத்தனை விலை கொடுத்து இந்தப் பொருளாதாரத் தேக்கத்திலிருந்து என்னுடைய வேலையைக் காப்பாற்றிக் கொண்டேன் என்பது மட்டுமே நிஜம்.

ஸ்பீக்கர் கரகரக்க கேப்டன் விமானம் தரையிரங்கப் போவதை உடைந்த ஆங்கிலத்தில் அறிவித்தார்;

முட்டை வடிவ ஜன்னலுக்கு வெளியே மெலிதான பனிப் போர்வைக்கு நடுவில் லண்டன் நகரம் மெல்ல மெல்ல பொpதாகிக் கொண்டிருந்தது. கத்தார் ஏர்வேஸ் விமானம் படிப்படியாக உயரத்தைக் குறைத்து, ரன்வேயில் ஓடி, திரும்பி, நகர்ந்து, குலுங்கி நின்றது.

மதியம் மணி 1 30. (லண்டனில்)

உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது

27 கருத்துகள்:

Madhan Pandiyan சொன்னது…

கிருஷ்ணா சார், தலைப்பு பிரமாதம்..., எட்டு மணி நேர சென்னை to லண்டன் விமான பயணத்தில், முன்று மாத flashbakகை நச்சென்று கதையாய் சொன்னது just fantastic.

- வாழ்த்துக்கள்
மதன் பாண்டியன்

Divya சொன்னது…

Thanks :)

Nice one Krishna..
Subtle nuances describing his mental turmoil prior to the departure are quite touching..
'அப்பா இந்தக் காமிரா வழியா உங்களத் தொட முடியுமா ?'-- the Highlight.

The downside, according to me is the heavy dosage of English terminologies .

Great work n Gud luck !!

Regards,
Divya

கிருஷ்ணா சொன்னது…

உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பின் சார்பாக சிறுகதை போட்டி

நானும் எழுதிய சிறுகதை

துளசி கோபால் சொன்னது…

நல்லா வந்துருக்கு கிருஷ்ணா.

வாழ்த்து(க்)கள்.

நிலாரசிகன் சொன்னது…

அப்பா இந்தக் காமிரா வழியா உங்களத் தொட முடியுமா


குழ‌ந்தையின் வ‌ரிக‌ள் நெஞ்சை தொட்ட‌ன‌. வாழ்த்துக‌ள் கிருஷ்ணா.:)

நிலாரசிகன் சொன்னது…

//ஸ்பீக்கர் கரகரக்க கேப்டன் தன்னையும் சக விமான ஊழியர்களையும் உடைந்த ஆங்கிலத்தில் அறிமுகம் செய்தார். /


நான் ப‌ய‌ணித்த‌ விமான‌ங்க‌ளிலேயே மோச‌மான‌ சேவை க‌த்தார்தான். த‌ண்ணீர் கேட்டால் அரைம‌ணி நேர‌ம் க‌ழித்து வ‌ந்து த‌ருகிறார்க‌ள். புன்ன‌கை ம‌ற‌ந்த‌ ப‌ணிப்பெண்க‌ள்.

Kumky சொன்னது…

நல்ல சரளமான நடை.
பொருத்தமான கதை.
ஆனால் சாப்ட்வேர் சார்ந்த ஆங்கில வார்த்தைகள் அனேக இடங்களில் வருவதை எளிமைப்படுத்தியிருக்கலாம்.
இன்னமும் கொஞ்சம் அழுத்தம் தேவை க்ருஷ்ணா.

SK சொன்னது…

Please add the line that you are submitting this to 'uraiyaadal' in the post itself.. :)

Good luck.

கடைக்குட்டி சொன்னது…

வெல்ல வாழ்த்துக்கள்...

உரையாடலின் எளிமை அருமை

Unknown சொன்னது…

கிருஷ்ணா சார்,

நடை அருமை, வாழ்த்துக்கள். ஒரு விமர்சனம்!

கொஞ்சம் ராஜேஷ்குமார் (முட்டை வடிவ ...) கொஞ்சம் சுஜாதா (பிராசஸ் படி பார்த்தா பென்ச்லே போட்டுருவாங்க. திங்க் பாஸிட்டிவிலி) தெரியறாங்க .... :)

மற்றபடி படிக்க நல்ல இருக்கு :)

நண்பன்
தினா

Unknown சொன்னது…

"பத்து நாட்களுக்குப் பின்பு ரவியின் பிராஜக்டின் கிளையன்ட் கம்பெனி ஈமெயில் அனுப்பியிருந்தது. லண்டனில் அவர்களுடைய சைட்டிலிருந்து சென்னை டீமுடன் வேலை செய்யும் ஆன்சைட் கோஆர்டினேட்டர் பதவி. இரண்டு வருஷத்திற்குப் பிறகு சென்னை வந்து அதே வேலையைச் செய்யலாம்"

மறுபடியும் !!!!

இதுல ஒரு கேள்வி இந்த பத்தில ரவியோட ப்ராஜெக்ட்ல தானே ஓபனிங் வருது அதுல கதை நாயகனுக்கு எப்படி வாய்ப்பு கெடைக்குது ?

நண்பன்
தினா

கிருஷ்ணா சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தினா . . . .

உங்களது கேள்விக்குப் பதில் இதுவா என்று பாருங்கள்
//
நானும் ரவியும் சேர்ந்தே முயற்சி செய்தோம். ஒரு புதிய பிராஜக்டில் பிராஜக்ட் மேனேஜர் பதவிக்கு கிளையன்ட் இன்டர்வியூ இரண்டு பேருக்குமே நடந்தது.
//

//
எனக்கு பின்னர் தொpவிப்பதாகச் சொல்லி விட்டு, ரவியை உடனே பொறுப்பேற்கச் சொன்னார்கள்.
//

கிருஷ்ணா சொன்னது…

Madhan Pandiyan, divya, துளசி கோபால்,நிலாரசிகன்,கும்க்கி,SK, கடைக்குட்டி,Dinakaran

அனைவருக்கும் நன்றி

Unknown சொன்னது…

நடந்தது என்ன! என்ற தொலைகாட்சி நிகழ்ச்சி ஞாகபத்திற்கு
வந்தது

நன்றாக இருந்தது.

முயன்ற வரை தமிழ் வார்த்தைகளை உபயோகிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

சிறந்த நடை

வாழ்த்துக்கள்

இவன்
ந. வேங்கடசுப்ரமணியன்

Vidhoosh சொன்னது…

//என் மகன் கேட்டான். அப்பா இந்தக் காமிரா வழியா உங்களத் தொட முடியுமா ?//
நுண்ணுணர்வுகளை அழகாக வரிகளில் கொட்டி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

கோபிநாத் சொன்னது…

யதார்த்தமான கதை..நடை...இப்போது உங்களுக்கு பின்னூட்டம் போட்டுக்கிட்டு இருக்கும் போது எங்க கம்பெனியில எத்தனை பேருக்கு ஆப்பு ரெடின்னு தெரியல..;)))

அந்த அளவுக்கு இருக்கு இப்போதைய நிலைமை.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;)

சென்ஷி சொன்னது…

:-(

ஒண்ணும் சொல்லிக்க முடியலை..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

-சென்ஷி

கிருஷ்ணா சொன்னது…

வருகைக்கு நன்றி கோபிநாத்

நிலைமை சரியில்லை.

என்ன சொல்ல ?

வருகைக்கும் வாழத்துக்கும் நன்றி சென்ஷி

ரவி சொன்னது…

கலவையான எண்ணங்களை கதையின் ஆரம்பத்தில் எழுப்புகிறார்...சொந்த அனுபவத்தை எழுத்தில் வடித்தது போல் இருக்கிறது...ஆங்காங்கே இருக்கும் உவமைகள் புதியவை...மகன் கேட்கும் கேள்வியாக கதையில் வருவது நெஞ்சை தொடுகிறது...கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கவனித்திருக்கலாம்...கொஞ்சம் எடிட் செய்தால் போதும்...தரமான கதை ஒன்று ரெடி...இந்தா புடி..(பரிசு)

என்னுடைய மதிப்பெண் 70 / 100

Unknown சொன்னது…

நல்ல கதை கிருஷ்ணா. வெற்றி பெற வாழ்த்துக்கள்.. அங்கங்க கொஞ்சம் சுஜாதாவோட நடையின் பாவனை தெரிகிறது. கொஞ்சம் எழுத்து பிழை. இதைத்தவிர சொல்ல வார்த்தை இல்லை கே கே... நெஞ்சம் கனக்கிறது கதையின் முடிவில்.

இப்படிக்கு,
கலை.

Mathuvathanan Mounasamy / cowboymathu சொன்னது…

அருமையான கதை.. எத்தனையோ பேரின் வாழ்க்கைகள் இப்படித்தான்...

கௌபாய்மது

Unknown சொன்னது…

உங்கள் கதைப் படித்தேன்.முதலில் ஆரம்பிக்கும் போது சுவராஸ்மாக் ஆரம்பித்தது.ஆனால் பிறகுசத்தில்லாமல்
போய்விட்டது.

அவர் புது கம்பெனி போய்விட்டாரா அல்லது அதே கம்பெனியா தெரியவில்லை.பிராஜக்ட் பிராஜக்ட் என்று குழப்புகிறது. என்னைப் போல்
software சம்பந்தம் இல்லாதவற்கும் புரிய மாதிரி எழுத வேண்டும்.

வாழ்த்துக்கள்.

கிருஷ்ணா சொன்னது…

கே.ரவிஷங்கர்

//பிராஜக்ட் பிராஜக்ட் என்று குழப்புகிறது. என்னைப் போல்
software சம்பந்தம் இல்லாதவற்கும் புரிய மாதிரி எழுத வேண்டும்.//

Project is one assigned job. Thats all.

//இத்தனை விலை கொடுத்து இந்தப் பொருளாதாரத் தேக்கத்திலிருந்து என்னுடைய வேலையைக் காப்பாற்றிக் கொண்டேன் என்பது மட்டுமே நிஜம்.//

He had not changed the job.

But he is forced to accept a unwilling transfer. It happens for all the Government employees too.

Thinking that it is software related . .. . and having a mindset like that . .. is a big block for reading such articles. . .

Radhakrishnan சொன்னது…

தற்போதைய சூழலைச் சொன்ன மென்மையான கதை. ஒன்றைப் பெற பல இழப்புகள் தவிர்க்க முடியாததாகப் போகிறது.

எழுத்து நடை ஒருவர் நமக்கு கதை சொல்வது போல அமைந்திருப்பது கதையின் சிறப்பு.

மிக்க நன்றி ஐயா.

Kalpagam சொன்னது…

நல்ல கதை கிருஷ்ணா! வெளி நாடுகளில் வேலை பார்க்கும் / முக்கியமாக மென்பொருள் வேலையில் இருக்கும் பலரின் மனப்போராட்டங்களை இயல்பாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

வாழ்த்துகள்!

பெயரில்லா சொன்னது…

Super! Thought provoking for people like me in the same boat.

கிருஷ்ணா சொன்னது…

தற்போதைய சூழலைச் சொன்ன மென்மையான கதை. ஒன்றைப் பெற பல இழப்புகள் தவிர்க்க முடியாததாகப் போகிறது.