உங்களோட குறிக்கோள் என்னங்க ?
உங்கள் நண்பர்கள், உறவினர்கள், கூட வேலை செய்பவர்கள், பஸ்ஸில் பக்கத்து சீட்டுக் காரர், அடுத்த வீட்டு மாமா என்று சிலரிடம் கேட்டுப் பாருங்கள்.
எப்பிடியாவது இந்த ஊர்ல ஒரு வீடு வாங்கிடணும்பா.
இந்த டிகிரியை முடிச்சாப் போதுங்க. எங்கப்பா பாடுற ராமாயணத்திலேயிருந்து தப்பிச்சுடுவேன்.
முதல்லே ஒரு நல்ல வேலைக்குப் போகணும் சார். இப்போ பாக்குறதெல்லாம் ஒரு வேலையா ? நாய்ப் பொழப்பு.
என்னங்க பொல்லாத குறிக்கோள். நாமளோடது என்ன பெரிய லட்சிய வாழ்க்கையா ? தினசரி பொழப்பை ஓட்டினாப் போதாதா ?
லட்சிய வாழ்க்கைக்குத்தான் குறிக்கோள் தேவையா ? ஏன் ? நமக்கெல்லாம் தேவையில்லையா ?
நம்மில் பலருக்கு குறிக்கோள் என்ற வார்த்தையில் குழப்பம் இருக்கிறது;. குறிக்கோள் என்பது தேவைதானா என்பதிலேயே சிலருக்குச் சந்தேகம்.
வாழ்க்கையில் குறிக்கோள் இல்லாமல் இருப்பது என்பது எதற்குச் சமம் தெரியுமா ?
எங்கே போகவேண்டும் என்று முடிவு செய்யாமலே பஸ் ஸ்டாண்டில் நிற்பதற்குச் சமம்.
எங்கே போகணும்னே தெரியாமல் எப்படி ஒரு பஸ்ஸில் ஏறுவது ? எந்த பஸ்ஸில் ஏறுவது கிழக்கே போற பஸ் ? இல்லே மேற்கே போறதா ?
எந்த ஊர் வண்டியைப் புடிக்கணும் ? எங்கே இறங்கணும் ?
பஸ்ஸில் போக முடியுமா ? இல்லை ரயிலைத்தான் பிடிக்கணுமா ?
எங்கே போகவேண்டும் என்று முடிவு செய்தால் மட்டுமே இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்கும். இல்லையா ?
போக வேண்டியது அமெரிக்கா என்னும் போது பஸ்சோ ரயிலோ வேலைக்காகாது. பிளைட்தான் பிடிக்கவேண்டும் என்று நான் சொல்ல வேண்டியது இல்லை.
யாருங்க அது . . . . செவ்வாய் கிரகம்கிறது . . . . கிரகம்தான் . . . . உங்களுக்கும் ஒரு பதில் இருக்கிறது. கொஞ்சம் பொறுங்கள்.
சரிப்பா . . . . உன் பிரச்சனை என்ன ? நான் எங்க போறேன்னு தெரியணும். அதானே. திருச்சிக்குப் போய்ச் சேரணும்;. இப்போ நான் பஸ்ஸைப் புடிக்கலாமா ?
கொஞ்சம் பொறுங்க சார். இன்னும் சில மேட்டர்ஸ் இருக்கு.
திருச்சிக்கு எத்தனை மணிக்குள்ள போய்ச் சேரணும் ? பத்து மணிக்கா ? சரி.
திருச்சில குறிப்பா எங்கே ? திருவரம்பூரா ? நல்லது.
இப்போ எந்த வண்டியப் புடிச்சா திருச்சிக்கு அதுவும் திருவரம்பூருக்கு காலைல பத்து மணிக்குள்ள போறது சாத்தியம் ?
இப்பிடி சில கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரிஞ்சாத்தான் அது முழுமையான குறிக்கோள்.
இப்போ சொல்லுங்க. திருச்சில காலைல பத்து மணிக்கு இண்டர்வியூ. நீங்க பன்னிரண்டு மணிக்குப் போனா என்ன பிரயோஜனம் ?
திருச்சிக்கு ஆட்டோலதான் போவேன்னு அடம் புடிச்சா அது நடைமுறைக்கு சாத்தியமா ?
சரி. அப்போ சரியான முழுமையான குறிக்கோள் எப்படித்தான் இருக்குமையா என்று நீங்கள் கேட்பது சரிதான்.
அதற்கும் ஒரு வழி இருக்கிறது.
இதைத்தான் மனிதவள வல்லுனர்கள் S M A R T குறிக்கோள் என்பார்கள்.
S - Specific - குறிப்பானதாக
M - Measurable - அளவிடக் கூடியதாக
A - Achievable - அடையக் கூடியதாக
R - Realistic, Relevant - நிஜத்தன்மையுடையதாக,
சம்பந்தமான
T - Time bound - கால வரையரையடையதாக
ஒரு சின்ன உதாரணம் இருந்தா உங்களுக்கு சுலபமா புரிஞ்சுடும். பார்க்கலாமா ?
இப்போ உங்க நண்பரோட குறிக்கோளைப் பார்க்கலாம்.

எப்பிடி ? வருஷத்தை மட்டும் முடிச்சாப் போதுமா ? இல்லை பாஸ் பண்ணணுமா ? குறிப்பாச் சொல்லுங்க பாஸ்.
ஒரு அஞ்சு வருஷம் டைம் எடுத்துக்கலாமா ? அப்பா என்ன சொல்லுவார் ?
இப்பிடி சொல்லிப் பாருங்க.
எப்பிடியோ . . . நாலு வருஷத்துக்குள்ள இந்த டிகிரிய 70 சதவீதத்துக்கு மேல மார்க் வாங்கி பாஸ் பண்ணிடணும்டா.
இது ஸ்மார்ட் குறிக்கோள்தானா என்று பார்க்கலாமா ?
குறிப்பானதா ? - பாஸ் வேண்டும் என்பது குறிப்பானதுதான்
அளவிடக் கூடியதா ? - 70 சதவீதம்தான் அளவீடு
அடையக் கூடியதா ? - எத்தனையோ பேர் அடைந்த குறிக்கோள்தான்
நிஜத்தன்மையுடையதா ? - நிச்சயமாக நிஜத்தன்மையுடையதே
கால வரையரையடையதா ? - நான்கு ஆண்டுகள் என்பதுதான் கால வரையறை
இன்னும் சில உதாரணங்களைப் பார்க்கலாம். அதெல்லாம் ஸ்மார்ட்தானா என்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். நோ கமாண்ட்ஸ்.
2015 வது வருஷக் கடைசிக்குள்ள சென்னைல ஒரு டபுள் பெட்ரும் பிளாட் ஒன்னு வாங்கிடணும்.
நேரங்காலமில்லாம ஓடற வேலை. சம்பளமும் அப்பிடி ஒண்ணும் பிரமாதமில்லே. 2015 மார்ச் முடியறதுக்குள்ள சாயங்காலம் 6 மணிக்கு வீட்டுக்குக் கிளம்பற மாதிரி ஒரு நாப்பதாயிரம் கையிலே வராப்பில ஒரு வேலை ரெடி பண்ணிரணும்.
இன்னைக்கு ஆகஸ்டு 30ம் தேதி. அடுத்த வருஷம் இதே ஆகஸ்டு 30ம் தேதி, அந்த ஆளு வாயாலயே நான்தான் உங்கப்பான்னு ஊரறிய, நாடறிய சொல்ல வைக்கிறேன்.
வர்ற 2016 ம் வருஷம் எங்க கட்சி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும்.
யாரு சார் செவ்வாய் கிரகத்துக்கு டிக்கட் கேட்டது ? உங்க குறிக்கோள்லே கால வரையரையே இருந்தாக் கூட இப்போதைக்கு சாத்தியப் படாத ஒன்று.
பார்க்கலாம். இப்போதானே மங்கள்யான் போய்ச் சேர்ந்திருக்கு.
அப்புறமா ஒரு காலத்துல மாநகர ராக்கெட், அதிவேக சொகுசு ராக்கெட், இடைநில்லா ராக்கெட், குளிர் சாதன ராக்கெட் எல்லாம் விடுவாங்க. நிலாலே ஒரு 10 நிமிஷம் நிக்கும். மசால்வடை, டீ எல்லாம் சாப்பிட்டுட்டு சந்தோசமா செவ்வாய் கிரகத்துக்குப் போயிட்டு வாங்க. சரிதானே ?
அப்போ நம்ம எல்லாரும் குறிக்கோள், அதை எப்பிடி வரையறை பண்றதுன்னு ஒரு மாதிரியா தெரிஞ்சுக்கிட்டோம்.
குறிக்கோளை ரெண்டு வகையாப் பிரிக்கலாம்
1. குறுகிய காலக்குறிக்கோள் - கால வரையறை குறுகியதாக இருக்கும். சட்டுன்னு முடிச்சுட்டு அடுத்த குறிக்கோளை பாக்கப் போகலாம்.
2. நீண்ட காலக் குறிக்கோள் - கால வரையறை கொஞ்சம் நீண்டதாக இருக்கும். பெரும்பாலும் அதிக திட்டமிடுதலும் முயற்சியும் தேவைப்படும்.
அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். குறிக்கோளை இடையிலே மாத்துறதெல்லாம் கூடாதுங்க.
ஒருவேளை அப்பிடி தோணிச்சுன்னா அந்தக் குறிக்கோளை அடைய நீங்க தவறிட்டதாத்தான் எடுத்துக்கணும்.
பரவாயில்லே விடுங்க. வேறே நல்லதா அடைய முடிஞ்சதா ஸ்மார்ட் குறிக்கோளாப் பாத்து ஆரம்பிக்கலாம்.
கடைசியா ஒரு ஸ்லோகன்.
==============================================================
குறிக்கோள்னு ஒண்ணு வச்சுக்கிறதும் அதை அடையறதுக்காக பலப்பல முயற்சிகள் எடுக்கறதும் பெரிய ரிஸ்க்கா இருக்கும் போலிருக்கே என்பவர்களுக்கு . . .
குறிக்கோளே இல்லாம காலத்தைக் கடத்தறது அதைவிட ரிஸ்க்கானது.
வாழ்க்கைல பல வருஷ காலம் உபயோகமா எதுவுமே செய்யாம வீணாத் தொலைஞ்சு போகும்.

(இன்னும் வரும்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக