Falls

Falls
5 Falls

செவ்வாய், 5 அக்டோபர், 2010

ஒரு சைபர் குற்றம் - 2

ஒரு சைபர் குற்றம் - 1

தினேஷ் இந்த வாரம் முடிக்க வேண்டிய ஒரு கேஸ் ்பைலை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

அனந்த் சுவாரஸ்யமாக யாரோ ஒரு பெண்ணிடம் கம்ப்யூட்டரில் சாட் செய்து கொண்டிருந்தான்.

அனந்த். இந்தக் கேஸ் டீட்டெயில்ஸ் எல்லாம் டாக்குமென்ட் பண்ணச் சொல்லி சொல்லியிருந்தோமே. தீபா அதை முடிச்சிட்டாளா ?

நேத்தே பாத்துட்டேன் பாஸ். கரெக்ஷன்ஸ் குடுத்திருக்கேன்.

குட். இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள பிரின்ட் பண்ணிடு.

ஓ.கே. பாஸ், நம்ம தீபா சில காரியங்களை சரியாப் பண்தில்லை கொஞ்சம் டிரெயினிங் குடுக்கலாம்னு இருக்கேன்.

அப்பிடியா ? எனக்கு என்னமோ அவ பெட்டரா பண்ற மாதிரிதான் தெரியுது.

இல்ல பாஸ். நீங்க பொண்ணுங்களை சரியாவே கவனிக்கறது இல்லை. இன்னைக்கு கூட பாருங்க. அவ ்பேஸ் ஷேப்புக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாம ஆரஞ்ச் கலர்லே போய் லிப்ஸ்டிக் போட்டிருக்கா.

தினேஷ் முறைத்தான். கையில் என்ன அகப்படும் என்று தேடிய போது கதவு தட்டப்பட்டது.

தினேஷ் “எஸ்” என்க தீபா ஆரஞ்ச் கலர் லிப்ஸ்டிக்குடன் எட்டிப்பார்த்தாள்.

பாஸ் நான் சொல்லலே.

யூ ஷட்டப் அனந்த். நீ சொல்லு தீபா.

சார். உங்களப் பாக்க ஒரு பொண்ணு வந்திருக்காங்க. வரச்சொல்லவா ?

வரச்சொல்லு.

இல்ல பாஸ், தீபா நம்ம ஸ்டெனோ மட்டுமில்லே. ரிஸப்ஷன்லே உக்காந்து கிளையன்ட்ஸையும் அட்டன்ட் பண்றதாலே, நயன்தாரா மாதிரி இல்லாட்டியும் ஒரு . . . . .

அவள் உள்ளே நுழையவும் அனந்த் நிறுத்தினான்.

தினேஷ் அவளை நிமிர்ந்து பார்த்தான்.

கோதுமை நிறம். உயரம் ஐந்தரை அடி இருக்கும். வெளிர் மஞ்சள் நிற சேலையில் வந்திருந்தாள். முகத்தில் குழப்பம், மெலிதான சோகம் எல்லாம் கலந்து தெரிந்தன.

பாஸ் நான் சொல்லலே, இவங்கதான் அது..

தினேஷ் குழப்பமாகப் பார்த்தான். நயன்தாரா ?

சாரி பாஸ் நீங்க ரொம்ப வீக், நயன்தாராவைக் கூடவா தெரியாது ? காலைல சொன்னேனே. பிந்து. இவங்கதான்.

அனந்த் அவளிடம் திரும்பி, “சாரி மிஸ் பிந்து.. அதிகாலைல நியூஸ் பாத்தேன். வெரி சாரி.

அப்புறம் மிஸ்தானே”

அவள் ஆம் என்று தலையசைத்தாள்.

இல்ல ஏதோ நயன்தாரான்னு . . . .

அது ஒண்ணுமில்லே. பாஸுக்கு நேத்து பாத்த செகண்ட் ஷே பத்தி சொல்லிட்டிருந்தேன். நீங்க உக்காருங்க.

அவள் தயக்கமாக நாற்காலியின் நுனியில் உட்கார்ந்தாள்.

தினேஷ் ஆரம்பித்தான்.

சொல்லுங்க மிஸ். பிந்து.

எங்க அப்பாவோட மரணத்துக்குக் காரணம் என்னன்னு தெரிஞ்சுக்கணும். அதுக்கு உங்களோட உதவி எனக்கு வேணும்.

உங்க அப்பாவோட கொலை வழக்கு ரொம்ப கிளியரா இருக்கு. அன்பு ஒரு மனநோயாளி. மந்திரியும் அதைத்தான் நிருபிப்பார். அன்பு ஒரு மனநோயாளி இல்லை அப்டிங்கறதுக்கு உங்ககிட்டே ஏதாவது பாயின்ட் இருக்கா ?

தேவையில்லே. ஏன்னா அன்பு மனநோயாளியாதான் இருந்தார். எனக்கும் அது நல்லாத் தெரியும். நான் ஒரு மனோத்துவ டாக்டர். அவர் என்னோட பேஷன்ட்தான்.

அப்பிடின்னா கேஸ் ரொம்ப கிளியரா இருக்கே.

ஆனா கொலை செய்யும் போதும் சரி இப்பவும் சரி அன்பு ஒரு மனநோயாளி இல்லை.

தினேஷும் அனந்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

அனந்த் மறுபடியும் கம்ப்யூட்டரில் ஆழ்ந்தான்.

உங்கப்பா ஒரு கம்ப்யூட்டர் புரொபஸரா ?

ஆமா.

எந்த காலேஜுல இருக்கார். சாரி இருந்தார் ?

எங்கேயும் வேலை பாக்கலே. சும்மா விசிட்டிங் புரொபஸரா நிறைய காலேஜஸுக்கு போவார்.

எங்கேயும் வேலை பாக்காததுக்கு ஏதாவது விசேஷமான காரணம் உண்டா ?

அவள் தயங்கினாள்.

அவருக்கு ஒரு ரிஸர்ச் லேப் வீட்டிலேயே இருக்கு. அங்கதான் அவர் ரிஸர்ச்சிலே அதிக நேரம் கழிப்பார்.

என்ன ரிஸர்ச் ?

பைத்தியங்களைப் பத்தி ரிஸர்ச் பண்றதாவும், இந்த ரிஸர்ச் மட்டும் சக்ஸா; ஆனா உலகத்திலே இருக்கிற எல்லாப் பைத்தியங்களையும் சரிபண்ணிடலாமுன்னும் சொல்வார். அன்புவைக் கூட அவர்தான் குணப்படுத்தினார்.

உங்கப்பா ஒரு கம்ப்யூட்டர் புரொபஸரா ? இல்லே மனோத்துவ டாக்டரா ?

கம்ப்யூட்டர் புரொபஸர்தான். எங்க சீனியர் மனோத்துவ டாக்டர் சந்திரன் கூடச் சேர்ந்துதான் ரிஸர்ச் பண்ணிட்டிருந்தார்.

தினேஷ் யோசனையில் ஆழ்ந்தான்.

சரி மிஸ் பிந்து. நாங்க உங்கப்பாவோட லேபைப் பாக்கணும். அது என்ன ஆராய்ச்சின்னு முதல்ல கண்டுபிடிக்கணும். அப்புறம் நாம யார் யாரையெல்லாம் விசாhpக்கறதுன்னு யோசிக்கலாம். இப்போ நீங்க புறப்படுங்க.

அனந்த் கம்ப்யூட்டரிலிருந்து தலையை வெளியே நீட்டினான்.

மிஸ் பிந்து, நான் ஒரு கேள்வி கேக்கலாமா ?

கேளுங்க.

நானும் வந்ததிலேயிருந்து கவனிச்சேன். அதெப்பிடி கொஞ்சம் கூட மலையாள வாசனையே இல்லாம சுத்ததமா தமிழ் பேசறீங்க ?

அனந்த் . . . . . தினேஷ் அதட்டினான்.

நான் பொறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான் . . . .

அவள் லேசாக சிரித்துக் கொண்டே எழுந்து கொண்டாள்.

ஏன்டா அனந்த், கொஞ்சமாவது சீரியசா இரேன். எப்பவும் உனக்கு காமெடிதானா.

சீரியசாத்தான் வேலை செஞ்சிருக்கேன். மொத்தம் பதினோரு ஆராய்ச்சிக் கட்டுரைகள் பாஸ், சந்தீப் - னு ஒரு அசிஸ்டன்ட் இருக்கான். அவனைப் புடிச்சு கேட்டாத்தான் கொஞ்சமாவது இந்த ஆராய்ச்சி எழவெல்லாம் நமக்குப் புரியும்.

உனக்கு எப்பிடிடா தெரியும் ? - தினேஷ்

இப்போ நீங்க பிந்துகிட்டே பேசிட்டிருந்தப்போ நான் இன்டர்நெட்டிலே தேடி எடுத்தேன். இவங்க எல்லாரோட ப்ரொ்பலும் அங்க இருக்குது பாஸ். சந்தீப் ஒரு பயோ-டெக்னாலஜpஸ்ட்.

கம்ப்யூட்டர் புரொபஸருக்கு எதுக்குடா பயோ-டெக்னாலஜp அசிஸ்டன்ட் ? ஏதாவது லிங்க் ?

யோசிக்கலாம் பாஸ். . . . புரொபஸரோட லேப்லே தேடிப் பாத்தா ஏதாவது லிங்க் கிடைக்கும்.

அதோட மஞ்சுளாவையும் சந்திச்சு பேசிறணும்.

அது யார்ரா மஞ்சுளா ?

ஆராய்ச்சிக் கட்டுரை எல்லாத்திலேயும் மஞ்சுளாவோட பேரும் இருக்கு பாஸ். அதனால அவங்களையும் ஒரு வாட்டி நாம சந்திச்சுப் பேசிரலாம்னு தோணுது.

கில்லாடிரா நீ . . . .அப்போ லிஸ்ட் ரெடி. லேப் . . . . சந்தீப் . . . . . மஞ்சுளா . . . . .

எஸ் பாஸ்.

************************************************************************************

1 கருத்து:

கிருஷ்ணா சொன்னது…

இரண்டாம் பாகம் - படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களைப் பதிவிடுங்கள்

- கிருஷ்ணா