Falls

Falls
5 Falls

புதன், 6 அக்டோபர், 2010

ஒரு சைபர் குற்றம் - 3

ஒரு சைபர் குற்றம் - 1

ஒரு சைபர் குற்றம் - 2



இதுதான் அப்பாவோட ரிஸர்ச் லேப். பிந்து வராந்தாவின் கடைசியில் இருந்த அறைக் கதவைத் திறந்தாள்.

அறை சுத்தமாக இருந்தது. ஒருபக்க சுவர் முழுவதும் கண்ணாடியால் மூடப்பட்ட புத்தக அலமாரிகள். ஏராளமான புத்தகங்கள் வரிசையாக நின்றிருந்தன.

எதிர்புறச் சுவர் ஓரமாக நான்கு கம்ப்யூட்டர்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தன. அந்த கம்ப்யூட்டர் டேபிளின் கீழ்த்தட்டில் பிரின்டர், ஸ்கேனர், சிடி, டிவிடி இத்யாதி . . . . இத்யாதி . . .

அறையின் நடுவில் ஒரு மேசை. சுழல் நாற்காலி. மேசையின் மேல் சில காகிதங்கள் எழுதப்படுவதற்காக காத்திருந்தன.

மேசைக்குப் பின்னால் ஒரு உயரமாக கட்டில் போன்ற ஏதோ ஒன்று போடப் பட்டிருந்தது. அதன் தலைப் பகுதியில் ஒரு உயரமான ஸ்டான்ட் பொருத்தி அதன் மேல் ஈ.ஸிஜp மானிட்டர் போல ஒன்றையும் மாட்டி வைத்திருந்தார்கள்.

அனந்த் புத்தக அலமாரியைக் குடைந்து கொண்டிருந்தான்.

தினேஷ் கட்டிலின் பக்கத்தில் போய் நின்றhன்.

பிந்து. இது என்ன கட்டில் ?

எனக்கு இதைப்பத்தி அதிகமா எதுவும் தெரியாது. அதான் அப்பாவோட ஸ்டூடன்ட் ஒருத்தரை வரச் சொல்லியிருக்கேன். அவர்கிட்டே பேசினா உங்களுக்கு உபயோகமா ஏதாவது தகவல் கிடைக்கலாம்.

தினேஷ் அந்தக் கட்டிலைப் பரிசோதித்தான். கட்டிலில் கிடந்த கேபிள் அனைத்திலும் ஊசி போன்ற முனைகள் அமைக்கப் பட்டிருந்தன. அந்தக் கேபிள்கள் கூட்டமாகப் பயணித்து ஸுட்கேஸ் போன்ற ஏதோ ஒரு வஸ்துவில் நுழைந்தன. ஸுட்கேஸிலிருந்து பயணப் பட்ட மற்றெhரு ஒற்றைக் கேபிள் ஒரு கம்ப்யூட்டரில் நுழைந்தது.

காலடிச் சத்தம் கேட்டு மூன்று பேரும் திரும்பினார்கள்.

இவர்தான் சந்தீப், அப்பாவோட ஸ்டூடன்ட். பிந்து புதியவனை அறிமுகம் செய்து வைத்தாள்.

சந்தீப் உயரமாக இருந்தான். வெளிற வைக்கப் பட்ட நீல நிற ஜPன்ஸும், ரத்தச் சிவப்பில் டி சர்டும் அணிந்திருந்தான். பிரேம் இல்லாத கண்ணாடி சீராகக் கத்தரிக்கப் பட்ட மீசை என்று ஹீரோ மாதிரி இருந்தான்.

சந்தீப் இருவருடனும் கை குலுக்கினான்.

சந்தீப், டாக்டர் ஸ்ரீதரனோட ஆராய்ச்சி பத்தி உங்ககிட்டே சில விஷயங்கள் கேட்கலாமா ? - தினேஷ்

கண்டிப்பா. அவர் என்னோட குரு. ரொம்ப புத்திசாலி. கம்ப்யூட்டர் நாலெட்ஜும் பயோ-இன்பர்மேடிக்ஸ் நாலெட்ஜும் சேர்ந்தாற் போல அவர்கிட்டே இருந்தது.. இந்த ரிஸர்ச் மட்டும் சக்சஸ் அனா உலகத்திலே இருக்கிற எல்லாப் பைத்தியங்களையும் சாpபண்ணிடலாம். அதோட கோமா பேஷன்டுகளுக்கு ஒரு அருமையான டிரீட்மென்ட் முறை கிடைச்சிருக்கும்.

அவருக்கு நோபல் பரிசு கூடக் கிடைச்சிருக்கும் சார். அவரப் போய் இந்த அன்பு ஏன் கொன்னான்னு தெரியலே சார்.

நான்கு பேரும் மேசையைச் சுற்றி ஆளுக்கொரு நாற்காலியைப் போட்டு உட்கார்ந்தார்கள்.

அனந்த் ஒரு காகிதத்தில் குறிப்பெடுக்கத் தொடங்கினான்.

உங்களுக்கு டாக்டர் ஸ்ரீதரனை எப்படித் தெரியும் ?

நான் ஒரு பயோ-இன்பர்மேடிக்ஸ் பட்டதாரி. இப்போ பி.எச்டி பட்டத்துக்காக ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கிறேன். எங்க பல்கலைக் கழக விதிப்படி இரண்டு கைடு வேணும். டாக்டர் ஸ்ரீதரன் எனக்கு அசோசியேட் கைடு.

அப்போ உங்க மெயின் கைடு யாரு ?

டாக்டர் சந்திரன். பிந்துவோட சீ்ப் டாக்டர்.

ஓ . . . எஸ். உங்களோடது என்ன ஆராய்ச்சின்னு சொல்ல முடியுமா ?

மனுஷனோட மூளையிலே இருந்து நரம்பு மண்டலம் வழியா சைகைகள் எப்பிடி உடலோட மத்த உறுப்புகளுக்கெல்லாம் போகுதுன்னு ஆராய்ச்சி பண்ணினோம். இந்த வகையிலே நானும் டாக்டரும் நிறைய ஆராய்ச்சிக் கட்டுரையெல்லாம் எழுதியிருக்கோம். மொத்தம் பதினோரு கட்டுரைகள்,

கட்டுரைகள்ல கம்ப்யூட்டர் பத்தியெல்லாம் இருக்கே. புரோகிராமிங்கெல்லாம் நீங்க எழுதுவீங்களா ? - அனந்த் கேட்டான்.

பயோ-இன்பர்மேடிக்ஸ்தான் நான். புரோகிராம் எல்லாம் மஞ்சுளாதான் எழுதுவா. சந்தீப் தொடர்ந்தான்.

ஓகோ. உங்க ஆராய்ச்சியை டாக்டர் முடிச்சுட்டாரா ? இல்லே இன்னும் மீதி இருக்கா ?

கிட்டத்தட்ட முடிச்சுட்டோம்.

உங்க ஆராய்ச்சியோட குறிக்கோள் என்ன ? எதைச் சாதிக்கறதுக்காக நீங்க ஆராய்ச்சி பண்றீங்க ?

சந்தீப் லேசாகத் தயங்கினான்.

டாக்டர் இதை வெளியே சொல்லக் கூடாதுன்னு சொன்னார். ஆனா இப்போ அவரே உயிரோட இல்லை. அவர் கொலையானதுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்கவாவது நான் சொல்றேன்.

அதாவது என்னோட ஆராய்ச்சியோட நோக்கம் என்னன்னா . . . . .

மனுஷனோட மூளை உடம்போட ஒவ்வொரு உறுப்புக்கும் தகுந்த மாதிhp சைகைகளை நரம்பு மண்டலம் வழியா அந்தந்த உறுப்புக்கு அனுப்பும். அந்த சைகைதான் அந்த உறுப்புக்கு கட்டளைத் தொடர்.

அதாவது கம்ப்யூட்டருக்கு சாப்ட்வேர் மாதிரி – அனந்த்

எஸ். எந்த உறுப்புக்கு சைகை கிடைக்காம போனாலும் அந்த உறுப்பு ஆரோக்கியமா இருந்தாக் கூட, செய்முறை தொpயாததால இயங்க முடியாது.

கம்ப்யூட்டர்லே எல்லாமே 1, 0 ன்னு இரண்டு குறியீடுகளை வச்சு நடக்கிற மாதிhp இந்த பயோ-இன்பர்மேடிக் சைகை, தகவல் எல்லாமே நான்கு குறியீட்டிலே இருக்கும். A, T, G, C தான் அந்த நான்கு. டி.என்.ஏ கூறுகள்னு சொல்லலாம். அடினைன், தையமின், குவானைன், சைட்டசின் - அப்பிடின்னு சொல்லுவாங்க.

இந்த சைகைகளை கையாள்வதைப் பற்றிதான் நான் கண்டுபிடித்தேன். இந்த சைகைகளையும் தகவல்களையும் நல்ல திறமையாகச் செயல்படும் மூளையிலிருந்து எடுத்து ஒரு சிடி தட்டிலோ டிவிடி தட்டிலோ சேமிக்க முடியுமா ?

அதற்குத்தான் நான் டாக்டர்ஸ்ரீதரனிடம் வந்தேன்.

தினேஷும் அனந்தும், ஏன் பிந்து கூட அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்தாள்.

இது சாத்தியமா ? - தினேஷ்

டாக்டர் இதை சாத்தியமாக்கி விட்டார், அவரோட கடைசி ஆராய்ச்சிக் கட்டுரை அதுக்கும் மேலே.

சந்தீப் தொடர்ந்தான்.

கம்ப்யூட்டருக்கு விண்டோஸ் மாதிரி. டாக்டர் மனுஷ மூளைக்கு ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் புரோகிராமே ரெடி பண்ணிட்டார்.

மனநிலை சரியில்லாத ஓரு ஆளோட மூளையிலே இருந்து மொத்த சிஸ்டத்தையும் அழிச்சுட்டு புதுசா ஆப்பரேட்டிங சிஸ்டத்தைப் பதிவு பண்ணிடலாம். மனுஷன் புதுசாப் பொறந்தமாதிரி ஆயிடுவான்.

அப்போ அன்புவையும் அப்பா அப்பிடித்தான் சரிபண்ணினாரா ? - பிந்து

ஆமா. அவனை இந்தக் கட்டில்லேதான் படுக்க வச்சு ஒரு கம்ப்யூட்டர் மூலமா ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மாத்தினோம்.

அதன் பிறகு எப்படி அந்தக் கருவிகளை இயக்குவது என்று ஒரு அரை மணிக்கு சந்தீப் விவாpத்தான். சிடி வகையறhக்களை எடுத்துக் காட்டினான்.

ஓகே. . . சந்தீப் நாங்க புறப்படுறேhம். ஏதாவது ஹெல்ப் வேணும்னா கால் பண்ணலாமா ? ஷ்யூர் தினேஷ் . . . . காத்திருக்கிறேன்.

செல்பேசி எண்களைப் பரிமாறிக் கொண்டு விடைபெற்றhர்கள்.

2 கருத்துகள்:

Rajkumar சொன்னது…

sorry to say that there are some basic mistakes in your wrinting about neurological aspects. it is well known how the impulse to perform is communicated to other parts of the body. ribonuclic acid sequences do not play any part. it is through electrical impulses due to de and repolarisation. however a good attempt to be inspired by ganesh vasanth

dondu(#11168674346665545885) சொன்னது…

கணேஷ் - வச்ந்த் - சுஜாதா

தினேஷ் - அனந்த் - கிருஷ்ணா.

அன்புடன்,
டோண்டு ராகவன்