Falls

Falls
5 Falls

வியாழன், 7 அக்டோபர், 2010

ஒரு சைபர் குற்றம் - 4

ஒரு சைபர் குற்றம் - 1

ஒரு சைபர் குற்றம் - 2

ஒரு சைபர் குற்றம் - 3

மஞ்சுளாவின் வீடு அழகாக இருந்தது. அவளுடைய கல்லுhரித் தோழியுடன் தங்கியிருந்தாள்.

உங்க பிரண்டும் படிக்கிறhங்களா ? - அனந்த் முதலில் ஆரம்பித்தான்.

இல்லே அவ சாப்ட்வேர்லே வேலை செய்யிறh . . . ஒரு பெரிய ஐடி கம்பெனியின் பெயரைச் சொன்னாள்.

இப்பல்லாம் பொண்ணுங்க லேடீஸ் ஹhஸ்டலை விட்டுட்டு தனியா வீடெடுத்துத் தங்க ஆரம்பிச்சுட்டாங்க. இல்லையா ?

மஞ்சுளா அழகாகப் புன்னகைத்தாள்.

டாக்டர் ஸ்ரீதரன் ஆராய்ச்சி பத்தி உங்ககிட்டே சில விஷயங்கள் கேட்கலாமா ? - தினேஷ்

கேளுங்க.

அனந்த் வழக்கம் போல் குறிப்பெடுக்கத் தொடங்கினான்.

உங்களுக்கு டாக்டர் ஸ்ரீதரனை எப்படித் தெரியும் ?

நான் ஒரு எம் எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ். இப்போ பி.எச்டி பட்டத்துக்காக ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கிறேன். டாக்டர் ஸ்ரீதரன் எனக்கு கைடு.

ஆராய்ச்சிக்குத் தேவையான புரோகிராமெல்லாம் நீங்கதான் எழுதுவீங்களா ?

எல்லாம் எழுதமாட்டேன். சின்னச் சின்ன மாடுல்ஸ்தான் நான் எழுதிக் கொடுப்பேன். டாக்டர் அதையெல்லாம் அவருக்குத் தேவையான வரிசைலே கம்பைல் பண்ணிப்பார்.

உங்களத் தவிர வேறே யாராவது புரோகிராம் எழுதுவாங்களா ?

இல்லை. நான் மட்டும்தான்.

நீங்க டாக்டரை எப்பல்லாம் சந்திப்பீங்க ?

கிளாஸிலேதான் அவரைப் பாக்க முடியும். நேரிலே கொஞ்சம் பேசிட்டு புரோகிராம் டீடெயில் எல்லாம் இ-மெயில்லே அனுப்பிடுவார்.

உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா அந்த மெயில் எல்லாம் நாங்க பாக்கலாமா ? ஷ்யூர்.

மஞ்சுளா லேப்டாப்பை லாகின் செய்து கொடுத்தாள்.

அனந்த் எழுந்து அந்த அறையை ஒரு சுற்று சுற்றி வந்தான்.

எல்லா இ-மெயிலும் அனேகமாக ஒரே மாதிரியாக இருந்தது.

“ரெஸ்பெக்டட் சார். இத்துடன் புரோகிராமை இணைத்துள்ளேன்.”

ஓவ்வொரு இ-மெயிலிலும் ஒவ்வொரு புரோகிராம் ்பைல் இணைக்கப் பட்டிருந்தது. டாக்டர் ஸ்ரீதரன், டாக்டர் சந்திரன், சந்தீப் எல்லோருக்கும் இ-மெயில்கள் காப்பி செய்யப்பட்டிருந்தன.

டாக்டர் சந்திரனுக்கு ஏன் காப்பி போடறீங்க ?

அவருதான் எங்க ப்ராஜக்டுக்கு பைனான்சியல் சப்போர்ட். அத்தோட அவரோட ஹhஸ்பிடல்லே வச்சுதான் ரெண்டு டாக்டர்களும் சேந்து பேஷன்டுக்கிட்டே டெஸ்ட் பண்ணுவாங்க.

சரி நாங்க டாக்டர் சந்திரனை எப்போ பாக்கலாம் ? அவரோட டைமிங் என்ன ?

அவரு ரொம்ப பிஸி. அதிகமா எங்க ரிஸர்ச்சில இன்வால்வ் ஆகவும் மாட்டார்.

ஓகே . . . . மஞ்சுளா. எங்களுக்கு ஒவ்வொரு புரோகிராம் மாடுலோட அடிப்படை பயன்பாடு என்ன அப்பிடின்னு ஒரு டீடெயில் தர முடியுமா ?

ஷ்யூர்.

மஞ்சுளா. நான் ஒரு கேள்வி கேக்கலாமா ? - அனந்த் தொடங்கினான்

கேளுங்க.

மலையாள புக்கெல்லாம் படிக்கிறீங்க. நானும் வந்ததிலேயிருந்து கவனிச்சேன். அதெப்பிடி கொஞ்சம் கூட மலையாள வாசனையே இல்லாம சுத்ததமா தமிழ் பேசறீங்க ?

என்னோட ரூம்மேட் கீர்த்தி மலையாளி. இது அவளோட புக்ஸ்.

கீர்த்தி . . . . . அழகான பேர் . . . கீர்த்தியும் அழகா இருப்பங்களா ? - அனந்த்.

மஞ்சுளா மறுபடியும் அழகாகப் புன்னகைத்தாள்.

தினேஷும் அனந்தும் மஞ்சுளாவிடமிருந்து செல் நம்பர், இ-மெயில் ஐடி இத்யாதிகளை வாங்கிக்கொண்டு விடைபெற்றhர்கள்.

தினேஷ் காரை ஓட்டிக் கொண்டே பேச ஆரம்பித்தான்

ஏன்டா . . எல்லாப் பொண்ணுங்ககிட்டேயும் மலையாள வாசனை அது இதுன்னு ஒரே கேள்வியாக் கேக்கறே ? கேஸுக்கு சம்பந்தமா உருப்படியா ஏதாவது கேக்கக் கூடாதா ?

கேஸுக்கு சம்பந்தமான உருப்படியான கேள்விதான் பாஸ். மஞ்சுளா வீட்ல ஒரு முக்கியமான எவிடன்ஸ் பாத்தேன்.

ஆனந்த் சொல்லவும் தினேஷ் ஆச்சரியமானான்.

கருத்துகள் இல்லை: