Falls

Falls
5 Falls

செவ்வாய், 5 அக்டோபர், 2010

ஒரு சைபர் குற்றம்

அதிகாலை மணி எட்டு.

கதிரவன் எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு சுறுசுறுப்பாக அன்றையக் கடமையை ஆரம்பித்ததில் டிசம்பர் மாதத்துப் பனி சன்னமாக விலகி சென்னை வெயில் தன் வேலையைக் காட்டத் தொடங்கியிருந்தது.

தினேஷ் குளித்து முடித்து அறையிலிருந்து வெளிப்பட்டான். படிகளில் தடதடத்து தரையைத் தொட்டான்.

சோபாவில் அழுக்கு அனந்த் கையில் டீவி ரிமோட்டுடன் இன்னும் தூக்கத்திலிருந்தான்.

ராத்திரி முழுக்க மிட்நைட் சாங்ஸ் பாக்க வேண்டியது. காலைல இப்பிடித் தூங்க வேண்டியது.

என்னடா அனந்த், இன்னும் நீ எழுந்திரிக்கலியா. இது வீடு மட்டுமில்லே. நம்ம ஆபீஸும் இதான். எழுந்திருடா.

திறந்திருந்த ஜன்னல் வழியாக இறைந்திருந்த தினசரிகளையும் சஞ்சிகைகளையும் பொறுக்கிக் கொண்டு தினேஷ் சோபாவில் சரிந்தான்.

அனந்த் சோம்பல் முறித்துக் கொண்டான்.

என்ன பாஸ், மிட்நைட் சாங்ஸை அப்பிடியே கன்டினியூ பண்ணிட்டிருந்தேன். இப்பிடி பூஜ வேளைல பூந்து கெடுத்திட்டீங்களே.
நம்ம நமீதா இருக்காங் களே . . . என்ன அருமையான . . .

சட், அனந்த். போதுண்டா. இன்னும் பத்து நிமிஷத்திலே நீ ஆபீஸ்ரூம்ல இருக்கிறே. போடா.

டான்ஸ் ஸடெப்ஸ் தெரியுமான்னு சொல்ல வந்தேன். என்ன பாஸ் நீங்க ?

தெரியுண்டா உன்னை - தினேஷ் தினசரி ஒன்றைத் தூக்கி அவன் மேல் எறிந்தான்.

அனந்த் அதைக் காட்ச் பிடித்து சத்தமாக ஹெட் நியூஸ் படித்தான்.

டாக்டர் ஸ்ரீதரன் நம்பியார் படுகொலை. சுட்டுக் கொன்ற அமைச்சர் இளவேந்தன் மகன் அன்பு கைது. என் மகன் ஒரு மன நோயாளி. அமைச்சர் இளவேந்தன் நாடகம்.

ரொம்ப பழைய நியூஸ். ராத்திரி பூரா சன் மியூசிக் சேனல்லே ்ப்ளாஷ் நியூஸ் இதான் பாஸ்.

யார்ரா டாக்டர் ஸ்ரீதரன் ? மென்டல் ஸ்பெஷலிஸ்ட்டா ?

இல்லே பாஸ். இவரு ஒரு பி.எச்டி டாக்டர். ஐஐடீ, அண்ணா யுனிவர்சிட்டிலேயெல்லாம் விசிட்டிங் புரபஸர். அமெரிக்காலே எம். எஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ். நேத்தே சன் நியூஸ்லே
பாத்துட்டேன். பாவம் பாஸ் பிந்து. அவ அழுததைத்தான் என்னாலே தாங்க முடியலே.

பிந்துவா ? யார்ரா அது ?

டாக்டரோட மகள் பாஸ். ஒரு இருவத்தெட்டு இருக்கும். . . . . . . . . வயசு.

சட் - தினேஷ் வாரப் பத்திரிக்கை ஒன்றைத் தூக்கி அவன் மேல் எறிய, அனந்த் அதைக் காட்ச் பிடித்துக் கொண்டு ஹhலை ஒட்டிய அவனுடைய அறைக்குள் மறைந்தான்.

************************************************************************************

4 கருத்துகள்:

பழமைபேசி சொன்னது…

அதெப்படிங்க, ஆண்டுக்கு ஒரு இடுகை சரியா எழுதுறீங்க??

இனி அடுத்த வருடந்தானா?? அடிக்கடி எழுதுங்க பாஸ்!!!

பெயரில்லா சொன்னது…

என்ன கிருஷ்ணா தொடரும் போட மறந்துடீங்களா...?

கிருஷ்ணா சொன்னது…

இந்தக் கதையை தினமும் ஒரு பாகமாகப் பதிவிட எண்ணியிருக்கிறேன்.

- கிருஷ்ணா

karnan சொன்னது…

ஒவ்வொரு கதாபாத்திர அரிமுகமும் அவரவர் குனாதிசயங்கலை காட்டிவிடுகிரார்.
உதாரனம்
தினேஷ் ‍ சுறுசுறுப்பாக அன்றையக் கடமையை ஆரம்பித்ததில்
அழுக்கு அனந்த் மிட்நைட் சாங்ஸ்
கிருஷ்ணா நல்ல துவக்கம்